செயற்கை மணல் கலவை பூச்சுக்கு உகந்ததா? விரிவாக விளக்குகிறார் பொறியாளர்
செயற்கை மணல் கலவை பூச்சுக்கு உகந்ததா? விரிவாக விளக்குகிறார் பொறியாளர்
ADDED : மார் 07, 2026 06:41 AM

நாங்கள் புதிதாக ஒரு வணிக வளாகம் கட்ட திட்டமிட்டுள்ளோம். அதில் ஒவ்வொரு பெரிய அறைகளுக்கு இடையேயும் பில்லர்கள் வருகின்றன. இதை தவிர்க்க ஏதேனும் புதிய தொழில்நுட்பம் உள்ளதா?
-சம்பத்குமார்: இதற்கு 'போஸ்ட் டென்ஷன்ட் ஸ்லாப்' எனும் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம். இதில் ரூப் கான்கிரீட் போட்ட பிறகு, ஏற்கனவே அதனுள்ளே பொருத்தியுள்ள ஸ்டீல் கேபிள்களை இழுத்து இறுக்குவதன் வாயிலாக சுமையை தாங்கும் திறனை அதிகரிக்கும் ஒரு மேம்பட்ட கான்கிரீட் தளம் நமக்கு கிடைக்கும். இதன் வாயிலாக ரூப் கான்கிரீட்டின் தடிமனை குறைப்பது மட்டுமின்றி, பில்லர் மற்றும் பீம்களுக்கு நீண்டதுார இடைவெளிகளை அமைக்கலாம். மேலும் கட்டுமான செலவு மற்றும் நேரத்தையும் மிச்சப்படுத்தலாம்.
வாடகைக்கு கட்டடம் கட்டிவிடும் பொழுது கடைகள் கட்டுவது நல்லதா அல்லது குடியிருப்புகள் கட்டுவது நல்லதா?
-மாதவன்: பொதுவாக கடைகள் கட்டுவதால் 10 முதல் 15 சதவீதம் வரை கட்டுமான செலவு குறையும். பராமரிப்பு செலவுகள் குறைவு. ஏனெனில் கடைகளில் சமையலறை மற்றும் குளியல் அறை பராமரிப்பு செலவுகள் குறைவு. குடியிருப்புகள் கட்டும் பொழுது பராமரிப்பு செலவுகள் அதிகம்.
சிலர் ஆற்று மணல்தான் பூச்சுக்கு சிறந்தது என்றும், சிலர் செயற்கை மணல் சிறந்தது என்றும், சிலர் இரண்டையும் கலந்து பூச்சு பூசலாம் என்கின்றனர். குழப்பமாக இருக்கிறது. தரத்தில் ஏதேனும் மாறுதால் ஏற்படுமா?
-பிரபாகரன்: .: இரண்டையும் கலந்து பூசலாம். ஆனால் செயற்கை மணலை சரியான முறையில் 'சீவ் அனாலிசிஸ் டெஸ்ட்' செய்து பூச்சிற்கு தேவையான மைக்ரான் அளவுள்ள செயற்கை மணலையும், இயற்கை மணலையும் சரியான விகிதத்தில் சிமென்ட் உடன் கலந்து பூசலாம்.
குறிப்பிட்ட நாட்கள் சரியான முறையில் கியூரிங் செய்தால் மட்டுமே தரத்தினை உறுதி செய்ய முடியும். இப்பொழுது மார்க்கெட்டில் கிடைக்கக்கூடிய அமிலங்களை சரியான முறையில் கலவையுடன் கலந்து பூசும்பொழுது, பூச்சில் வரக்கூடிய கிரேக்குகளை தவிர்க்கலாம்.
எலிவேஷன் மற்றும் இன்டீரியர் ஆகியவற்றில் புரொபைல் லைட் அமைக்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?
-நந்தினி: எலிவேஷனில் புரோபைல் லைட் அமைக்கும் பொழுது, பிரத்யேகமாக வெளிப்புறத்திற்கு மட்டும் அமைக்கக்கூடிய வாட்டர் புரூப்பிங் லைட்டை தரமானதாக தேர்வு செய்து அமைக்கவும். அவற்றில் நீர் உட்புகாதவாறு சரியான முறையில் கவர் செய்துள்ளதா என்பதனை உறுதிப்படுத்திக் கொள்ளவும். இன்டீரியரில் புரொபைல் லைட் அமைக்கும்போது எளிதான முறையில் கையாளும்படி அமைக்கவும்.
கட்டுமானத்திற்கு ஏ.ஏ.சி., பிளாக் நல்லதா அல்லது ரெட் பிரிக் நல்லதா? வீடு குளிர்ச்சியாக இருக்க எந்த செங்கலை பயன்படுத்த வேண்டும்.
-ரவி: இரண்டுமே நல்ல 'மெட்டீரியல்'தான். ரெட் பிரிக் பாரம்பரியமாக நாம் பல வருடங்களாக பயன்படுத்தி வருகிறோகம். ஆனால் ஏ.ஏ.சி., பிளாக் லைட் வெயிட், தொழிற்சாலை தயாரிப்பு, ஒரே மாதிரியான அளவு இருக்கும். 'ஹீட் இன்சலேஷன்' எனும் வெப்பம் தாங்கும் திறன் நன்றாக இருக்கும்.
அதேசமயம், உங்கள் வீடு எந்த இடத்தில் அமைகிறது, பட்ஜெட் என்ன, தளங்கள் எத்தனை என்று பார்த்துதான் இறுதியாக முடிவு சொல்ல முடியும். வெப்ப கட்டுப்பாடு முக்கியம் என்றால் ஏ.ஏ.சி., அல்லது 'போரோதெர்ம்' நல்லது. போரோதெர்ம் கற்களை வெயில் அதிகமாக இருக்கும் இடங்களில் அதிகம் பயன்படுத்தலாம்.
-லோகநாதன்
பொறியாளர்
கோயம்புத்துார் மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்கம் (காட்சியா)
