sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பாட்டி சொத்தை விற்க உடன் பிறந்தோர் சம்மத பத்திரம் தேவையா?

/

பாட்டி சொத்தை விற்க உடன் பிறந்தோர் சம்மத பத்திரம் தேவையா?

பாட்டி சொத்தை விற்க உடன் பிறந்தோர் சம்மத பத்திரம் தேவையா?

பாட்டி சொத்தை விற்க உடன் பிறந்தோர் சம்மத பத்திரம் தேவையா?


ADDED : ஏப் 19, 2025 02:59 AM

Google News

ADDED : ஏப் 19, 2025 02:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நீலகிரி மாவட்டம், இத்தலார் கிராமத்தில் உள்ள அட்டியில், வங்கி அடமானத்தில் உள்ள, 3.5 சென்ட் வீட்டுமனை, 850 சதுரடி தரைதளம் மற்றும், 400 சதுரடி முதல் தளத்துடன் கூடிய வீடு விற்பனைக்கு வருகிறது. இதில், சம்பந்தப்பட்ட வீட்டு உரிமையாளர், வங்கியில் செட்டில்மென்ட் செய்து வீட்டை கொடுக்க எண்ணியுள்ளார். இச்சூழலில் விவரங்கள் மற்றும் மதிப்பை கூறவும்.

-பீமன், கோத்தகிரி.

பொதுவாக அட்டி என்பது ஒரு சமூகத்தார், ஒரு கிராமத்தில் தாங்களாகவே சேர்ந்து அமைத்துக்கொண்ட, 'கேட்டட் கம்யூனிட்டி' போன்ற ஒரு அமைப்பு. மிகவும் பாதுகாப்பானது என்று சொல்லும்போது, பிற சமூகத்தார், அதுனுள் சொத்துக்களை வாங்கி வாழ்வது என்பது அதிகம் நடந்திராத ஒன்றாக இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளவும்.

இதுபோன்ற சந்தர்ப்பங்களில், மார்க்கெட் நிலவரம் என்பதைவிட அங்கு வசிக்கும் சமூகத்தாரை கலந்து, அவர்கள் கணிக்கும் மதிப்பு என்பது பிரதானம். அதையும் அவர்களை அனுசரித்து முடிவுக்கு வருவதே சிறந்தது. வங்கியில் செட்டில்மென்ட் முடிந்து வில்லங்க சான்றிதழில் அடமானம் ரத்தான தகவல் உள்ளதா என்பதை பார்த்து, கிரயத்திற்கு ஏற்பாடு செய்யவும். இதன் மதிப்பு ரூ.20 லட்சமாகும்.

கோவை, ஆர்.எஸ்.புரம், கிழக்கு பெரியசாமி வீதியில் உள்ள அபார்ட்மென்ட் ஒன்றில் 3பி.எச்.கே., மேற்கு பார்த்த வீடு, 1,800 சதுரடி மற்றும், 850 சதுரடியில் சூப்பர் பில்டப் ஏரியா, 850 சதுரடிகள் யு.டி.எஸ்., ஆக உள்ளது. இதற்கு மாத வாடகையாக, ரூ.30 ஆயிரம் வரும் பட்சத்தில் என்ன விலை கொடுக்கலாம்?

-ரமேஷ், வடவள்ளி.

யு.டி.எஸ்., ஆக இரு சென்ட்டுக்கு பக்கமாக வரும்பொழுது அடி நிலத்தின் மதிப்பு ரூ.1.20 கோடி ஆகிறது. 1,800 சதுரடியில் கட்டுமானம் எப்படியும் சதுரடிக்கு ரூ.1,800க்கு குறையாது எனில், கட்டடம் மட்டும் ரூ.32.50 லட்சம் போகும். அங்குள்ள சங்க நிர்வாகிகளிடம் பேசி அந்த அபார்ட்மென்டின் நிலவரம் தெரிந்தவுடன், விற்பவர் வைத்திருக்கும் கட்டண நிலுவை குறித்து தெரிந்துகொள்ளவும்.

சங்க என்.ஓ.சி., வீட்டு வரி, மின் கட்டணம் பாக்கி என, அனைத்தும் சோதித்துக்கொள்ளவும். இந்த கணக்குகள் ஒருபுறம் இருந்தாலும், வாடகை என்று ரூ.30 ஆயிரம் வரும்பொழுது, ரூ.1.25 கோடிக்கு மேல் வாங்குவது என்பது உங்களது பிரியத்தை பொறுத்ததாகும்.

கோவை, ராமநாதபுரம், திருவள்ளுவர் நகரில், 4 சென்ட் இடம் பழைய டி.டி.சி.பி., அனுமதியுடன், 30 அடி தடத்தில், 1,400 சதுரடிகள் தரைதளம், 750 சதுரடிகள், முதல் தளம் கொண்ட, 20 ஆண்டு பழைய வீடு ஒன்று விற்பனைக்கு வருகிறது. என்ன விலைக்கு வாங்கலாம்.

-சபீனா, கோவை.

இந்த இடம் திருச்சி ரோட்டில் இருந்து, அதாவது பஸ் ஸ்டாப்பில் இருந்து, 15 நிமிடங்களுக்குள் சென்றுவிடலாம். ஒரு நல்ல சொத்தாக, தவற விடக்கூடாத ஒன்று. மதிப்பு என்று வரும்பொழுது சென்ட் ரூ.25 லட்சமும், கட்டடத்திற்கு குறைந்த மதிப்பான சதுரடிக்கு, 750 என மதிப்பிட்டு பார்க்கவும். எனவே, ரூ.1.10 கோடிக்கு வாங்கலாம். வாடகை மொத்தம் ரூ.30 ஆயிரம் வருகிறதா என பார்த்துக்கொள்ளவும். குறிப்பாக, சட்ட கருத்துரு பெறாமல் வாங்க முயற்சிக்க வேண்டாம்.

எனக்கு என் தந்தைவழி பாட்டி உயில் மூலம் எழுதிக்கொடுத்த சொத்தினை விற்க விரும்புகிறேன். எனது, சகோதரிகள் இருவரிடம் இருந்து, சம்மத பத்திரம் கேட்கின்றனர். இது தேவையா?

-ஸ்ரீராம், நவ இந்தியா.

பாட்டி என்ற பெண்மணியின் சொத்து என்பதே, மேற்படி பாட்டி என்ன வேண்டுமானாலும் செய்யலாம். யாருக்கும் பதில் சொல்ல வேண்டாம் என்ற வகைப்பாட்டில் சொத்து உள்ளது. யாருக்கு வேண்டுமானாலும் அவர் எழுதிக்கொடுக்கலாம்.

பேரனான உங்களுக்கென்று எழுதிக்கொடுத்தபின், யாரும் அதில் உரிமை கொண்டாடா இயலாது. சகோதரிகளிடம் இருந்து சம்மத பத்திரம் கேட்க, இது ஒன்றும் பாட்டன்வழி வந்த சொத்து அல்ல என்பதை அறியவும்.

தகவல்: ஆர்.எம். மயிலேறு,

கன்சல்டிங் இன்ஜினியர்.






      Dinamalar
      Follow us