/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சரியான எடையில் சமையல் காஸ் உள்ளதா? சரிபார்த்து சப்ளை செய்ய எதிர்பார்ப்பு
/
சரியான எடையில் சமையல் காஸ் உள்ளதா? சரிபார்த்து சப்ளை செய்ய எதிர்பார்ப்பு
சரியான எடையில் சமையல் காஸ் உள்ளதா? சரிபார்த்து சப்ளை செய்ய எதிர்பார்ப்பு
சரியான எடையில் சமையல் காஸ் உள்ளதா? சரிபார்த்து சப்ளை செய்ய எதிர்பார்ப்பு
ADDED : ஜன 21, 2025 10:13 PM
பொள்ளாச்சி, ; சிலிண்டரில் குறிப்பிட்டுள்ள அளவு காஸ் உள்ளதா என்பதை, எடை கருவியுடன் சரிபார்த்து, சப்ளை செய்வதை, சட்ட அளவியல் துறையினர் உறுதிப்படுத்த வேண்டும்.
பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், பெரும்பாலான மக்கள், பல்வேறு நிறுவனங்களின் வாயிலாக சமையல் காஸ் இணைப்பு பெற்றுள்ளனர்.
வீடுகளில் சிலிண்டர் காலியானவுடன், மொபைல்போன் வாயிலாக 'புக்கிங்' செய்தவுடன் அடுத்த நாளே, வீட்டிற்கு சிலிண்டர் சப்ளை செய்யப்படுகிறது.
இருப்பினும், ஒரு குடும்பத்துக்கு ஒரு மாதத்துக்கு வரும் சிலிண்டர், ஒரு வாரத்துக்கு முன்பே தீர்ந்து விடுகிறது என பெண்கள் புலம்பி வருகின்றனர். இந்த மாதம், அதிகமாக காஸ் பயன்படுத்தி விட்டோம் எனவும் ஆறுதல் படுத்திக் கொள்கின்றனர்.
இதனால், சிலிண்டரில் குறிப்பிட்டுள்ள அளவு காஸ் உள்ளதா என்பதை எடை கருவியுடன் சரிபார்த்து, சப்ளை செய்வதை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
தன்னார்வலர்கள் கூறியதாவது:
சிலிண்டரின் எடை, காஸ் எடை குறித்து அந்த சிலிண்டரில் குறிப்பிடப்பட்டிருக்கும். வீட்டு உபயோக சிலிண்டர்களில் 14.2 கிலோ காஸ் இருக்க வேண்டும். காஸ் நிறுவனங்களை பொறுத்தவரை, அனைத்தும் 'கம்யூட்டரைஸ்டு பில்லிங்' என்பதால், தவறு நேர வாய்ப்பில்லை.
இருப்பினும், சப்ளை செய்பவர்கள் தங்களுடன் எடை கருவி கொண்டு வந்து, சிலிண்டரில் குறிப்பிட்டுள்ள அளவு காஸ் உள்ளதா; 'சீல்' சரியாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்திய பிறகே வழங்க வேண்டும்.
பெரும்பாலான ஊழியர்கள், தராசில் எடை போட்டு சப்ளை செய்யப்படுவது கிடையாது. இதனை, சட்ட அளவியல் துறையினர் அவ்வப்போது ஆய்வு நடத்தி கண்டறிய வேண்டும். அப்போதுதான், காஸ் சிலிண்டர் சப்ளை செய்யப்படும்போது, சரியான எடையில் உள்ளதா என்பதை உறுதி செய்ய முடியும்.
இவ்வாறு, கூறினர்.