sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தமிழகத்தில் உளவுத்துறை உறங்குகிறதா? ஹிந்து முன்னணி சந்தேகம்

/

தமிழகத்தில் உளவுத்துறை உறங்குகிறதா? ஹிந்து முன்னணி சந்தேகம்

தமிழகத்தில் உளவுத்துறை உறங்குகிறதா? ஹிந்து முன்னணி சந்தேகம்

தமிழகத்தில் உளவுத்துறை உறங்குகிறதா? ஹிந்து முன்னணி சந்தேகம்


ADDED : ஜூலை 17, 2025 10:27 AM

Google News

ADDED : ஜூலை 17, 2025 10:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: 'தமிழகத்தில், பயங்கரவாத செயலை கண்காணிக்காமல் தமிழக உளவுத்துறை உறங்குகிறதா?' என்று ஹிந்து முன்னணி சந்தேகம் தெரிவித்துள்ளது.

அதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை: கடந்த, 1998ல், அல் - உம்மா பயங்கரவாதிகளால், கோவையில் பயங்கர குண்டு வெடிப்பு நிகழ்ந்து, 58 பேர் இறந்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளை கடந்த வாரம் முதல், தமிழக பயங்கரவாத தடுப்பு போலீசார் கைது செய்து வருகின்றனர். பிடிபட்ட பயங்கரவாதிகளிடமிருந்து பல அதிர்ச்சி தரும் தகவல்கள் விசாரணையில் தெரிய வருகிறது.

இரு நாட்களுக்கு முன், ஆந்திராவில் கைது செய்யப்பட்ட தலைமறைவு குற்றவாளிகளான அபுபக்கர் சித்திக் மற்றும் முகமது அலி ஆகியோர் தங்களது வாக்குமூலத்தில் பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளனர். அதில், அல் - உம்மா இயக்க தலைவர் பாட்ஷா, தங்கள் ஊரான நாகப்பட்டினத்துக்கு வந்து ரகசிய கூட்டங்கள் நடத்தி, போலீசாரிடம் சிக்காமல் தப்பிப்பது எப்படி என்ற வித்தைகளை கற்று கொடுத்தார் என கூறி இருப்பதும், 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த போதும், இளையான்குடிக்கு வெடி மருந்துகள் வாங்க, இரு முறை வந்துள்ளார்.

தேடப்படும் பயங்கரவாதிகளான, இவர்கள் தமிழகத்தில் சுதந்திரமாக வந்து, வெடி பொருட்களுக்கான மருந்துகள் வாங்கிய போது, தமிழக போலீஸ்துறை உறக்கத்தில் இருந்துள்ளதா என்ற கேள்வி எழுகிறது. இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் யார், வெடி மருந்துகள் வாங்கி மீண்டும் ஒரு சதித் திட்டத்தை அரங்கேற்ற முயற்சி செய்தார்களா என்பதை பற்றி தமிழக காவல் துறை, இவர்கள் பிடிபடும் வரை கண்டுகொள்ளவில்லையா, என்பதும் பல சந்தேகங்களை எழுப்புகிறது.

பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பயங்கராவதிகள், அதில் கிடைத்த பணத்தை கொண்டு ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்யும் பண முதலைகளாக மாறி உள்ளதை கூட, அறியாதவர்களாக உளவுத்துறை இருந்திருக்கிறது. மத்திய அரசின் வாயிலாக தகவல் பெற்று, பயங்கராவத தடுப்பு போலீசார், இவர்களை பிடித்துள்ளனர். ஏ.டி.எஸ்., உருவாக்கப்படும் முன், தமிழக உளவு துறையும், போலீசாரும், பயங்கராவதிகள் நடமாட்டத்தை அறியாமல் இருந்ததே பல படுகொலைகளுக்கு காரணமாக அமைந்துள்ளது.

இவர்கள் எங்கிருந்து, எதற்காக வெடி மருந்துகள் வாங்கினர், இன்னும் என்னென்ன சதி செயலுக்கு திட்டம் தீட்டி இருந்தனர் என்பது பற்றி முழுமையாக விசாரிக்க வேண்டும். அது மட்டுமன்றி, இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்களையும், பண உதவி செய்தவர்களையும் இவ்வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்க வேண்டும்.

இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us