/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நீரோடை சுத்தமாகுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு
/
நீரோடை சுத்தமாகுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : ஜன 21, 2024 11:43 PM

கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, செட்டியக்காபாளையத்தில் உள்ள நீரோடை புதர் சூழ்ந்து உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கிணத்துக்கடவு, செட்டியக்காபாளையத்தில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இங்குள்ளவர்கள் பெரும்பாலும் விவசாயிகளாவர். இப்பகுதியில் நீரோடை உள்ளது. இந்த நீரோடை நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்கும் வகையில் இருந்தது.
இந்நிலையில், நீரோடையை நீண்ட காலமாக சுத்தம் செய்யாமல் புதர் மண்டி இருப்பதுடன், குப்பையும் குவிக்கப்பட்டுள்ளது.
இதனால், இந்த நீரோடையில் துர்நாற்றம் வீசுகிறது. பொது சுகாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த இடத்தில் குப்பை கொட்டுவதை தடுக்க, ஊராட்சி நிர்வாகம் குப்பை தொட்டி அமைக்க வேண்டும்.
நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்கும் வகையில், நீரோடையை சுத்தம் செய்ய வேண்டும், என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.