/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உக்கடம் மேம்பாலம் தரமாக இருக்கிறதா? நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு
/
உக்கடம் மேம்பாலம் தரமாக இருக்கிறதா? நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு
உக்கடம் மேம்பாலம் தரமாக இருக்கிறதா? நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு
உக்கடம் மேம்பாலம் தரமாக இருக்கிறதா? நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு
ADDED : ஜூலை 16, 2025 10:55 PM
கோவை; உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரை, மாநில நெடுஞ்சாலைத்துறையால் மேம்பாலம் கட்டப்பட்டு, பயன்பாட்டில் இருக்கிறது. கடந்தாண்டு ஆக., 9ல் தமிழக முதல்வர் ஸ்டாலின், இப்பாலத்தை பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
இப்பாலத்தை தேசிய நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைக்க வேண்டும் என்பது விதிமுறை. அதற்கு முன்னதாக, மேம்பாலத்தின் தரம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அறிக்கை பெறப்பட்டு, அதன் அடிப்படையில் துறை ரீதியாக மாற்றப்படும்.
நெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் சரவணன் தலைமையிலான குழுவினர், உக்கடம் மேம்பாலத்தை ஆய்வு செய்தனர்.
உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரை போடப்பட்டுள்ள ரோட்டின் கனம், வாகனங்கள் பயணிக்கும்போது ஏற்படும் அதிர்வு, வாகன போக்குவரத்து, ஆத்துப்பாலம் சந்திப்பில் போடப்பட்டுள்ள 'ரவுண்டானா', விதிமுறைக்கு உட்பட்டு சாலை மற்றும் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்யப்பட்டது.
நெடுஞ்சாலைத்துறையினர் கூறுகையில், 'மேம்பாலம் கட்டப்பட்டு ஓராண்டாகப் போகிறது; மாநில நெடுஞ்சாலைத்துறை பராமரித்தது. மீண்டும் தேசிய நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைப்பதற்கு முன், அதன் தரம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. ஆய்வறிக்கை பெற்றதும் தேசிய நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைக்கப்படும்' என்றனர்.