/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொழுநோய் பாதிப்பு கோவையில் உள்ளதா? ஆக., 1ம் தேதி முதல் வீடு வீடாக நடக்கிறது ஆய்வு
/
தொழுநோய் பாதிப்பு கோவையில் உள்ளதா? ஆக., 1ம் தேதி முதல் வீடு வீடாக நடக்கிறது ஆய்வு
தொழுநோய் பாதிப்பு கோவையில் உள்ளதா? ஆக., 1ம் தேதி முதல் வீடு வீடாக நடக்கிறது ஆய்வு
தொழுநோய் பாதிப்பு கோவையில் உள்ளதா? ஆக., 1ம் தேதி முதல் வீடு வீடாக நடக்கிறது ஆய்வு
ADDED : ஜூலை 15, 2025 09:03 PM
கோவை; கோவை மாநகராட்சி முழுமையாகவும் மற்றும் குறிப்பிட்ட கிராமப்புறங்களிலும் தொழுநோய் பாதிப்பு உள்ளதா என்ற ஆய்வு பணிகள் ஆக., 1ம் தேதி முதல் துவங்கவுள்ளது.
தொழுநோய் முற்றிலும் ஒழிக்கும் வகையில், சிகிச்சை அளிக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தொழுநோய் ஒழிப்பு திட்டம் செயல்பாட்டில் உள்ளது. கடந்தாண்டு தொழுநோய் பாதிப்பு சற்று அதிகம் இருக்கலாம் என கணிக்கப்பட்ட ஆனைமலை,சூலுார் பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆரம்ப நிலை அறிகுறியுடன், 7 பேர் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நடப்பாண்டுக்கான ஆய்வுகள் இரண்டு கட்டமாக நடைபெறவுள்ளது. முதல்கட்டமாக, ஆக., 1ம் தேதி முதல் 20ம் தேதி வரையும், அக்., 24ம் தேதி முதல் நவ., 10ம் தேதி வரையும் வீடு வீடாக ஆய்வுகள் மேற்கொள்ளவுள்ளனர்.
கோவை மருத்துவ பணிகள் துணை இயக்குனர் ( தொழுநோய் ஒழிப்பு) சிவக்குமாரி கூறியதாவது:
தொழுநோய் பாதிப்பு அறிகுறிகள் உள்ளதா என்று ஆய்வுகள் மேற்கொள்ளவுள்ளோம். கோவையில், 18.37 லட்சம் மக்களும், 4.59 லட்சம் வீடுகளும் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆய்வுகளுக்கு, 849 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவிலும் தலா 2 பேர் இடம் பெற்று உள்ளனர்.
மாநகராட்சி பகுதிகளில் மட்டும், 2.76 லட்சம் வீடுகளில், 11 லட்சத்து 5 ஆயிரம் பேரிடம் ஆய்வு செய்யவுள்ளோம்.
பலர் சமூகத்தில் ஒதுக்கிவிடுவார்கள் என்ற அச்சத்தில் சிகிச்சைக்கு வருவதில்லை. தொழுநோய் பாதிப்பை குணப்படுத்திவிட முடியும் என்பதால், தயக்கம், பயமின்றி ஆய்வுக்கு வருபவர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

