/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மீன் ஐஸ்பார்களில் 'பார்மலின்' உள்ளதா? பரிசோதிக்க உணவு பாதுகாப்புத்துறை அறிவுறுத்தல்

ADDED : ஜூலை 08, 2025 10:02 PM

கோவை; வெளிமாநிலங்களில் இருந்து, மீன்கள் விற்பனைக்கு வரும் நிலையில், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை, ஐஸ்பார்களின் மாதிரிகளைபரிசோதனைக்கு அனுப்பி, பதிவேடுகளை பராமரிக்க வேண்டும் என, உணவு பாதுகாப்புத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது.
உக்கடம் மீன் மார்க்கெட்டில், 48 மொத்த வியாபாரிகளும், 23 சில்லரை விற்பனையாளர்களும் உள்ளனர்.நேற்று இங்கு ஆய்வு செய்த உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள், எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., பதிவு புதுப்பிக்க வேண்டியவர்களுக்கு அதற்குரிய ஏற்பாடுகளை, செய்து கொடுத்தனர்.
மீன் கொள்முதல், பராமரிப்பு, கழிவு மேலாண்மை, சார்ந்த அறிவுறுத்தல்கள் வழங்கினர். மீன் கொள்முதல் முதல் கழிவு அப்புறப்படுத்துவது வரை, வியாபாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
அப்போது, மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அனுராதா கூறியதாவது:
வெளி மாநிலங்களில் இருந்து, ஐஸ்பார்களில் வைத்து மீன் அனுப்பப்படுகிறது.
மீன்கள் மீது பார்மலின் கெமிக்கல் சேர்க்கப்படுகிறதா என்பதை அறிய, ஐஸ்பார்களை ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலில் நிரப்பி, பரிசோதனைக்கு கொடுக்க வேண்டும்.
ஆறு மாதங்களுக்கு ஒரு முறை, இப்பரிசோதனையை ஆய்வகங்களில் மேற்கொண்டு, சுயமாக பதிவேடு பராமரிக்க வேண்டும்.
கெட்டுப்போன மீன்களை எக்காரணம் கொண்டும், விற்பனை செய்யக்கூடாது.
இவ்வாறு, அவர் கூறினார்.