ADDED : மார் 29, 2026 09:06 PM

அ நிறம் | அளவு
கோவை: உப்பிலிபாளையம் ரவுண்டானாவில் இருந்து ஆடிஸ் வீதிக்கு திரும்பும் இடத்தில், நாளொரு மாற்றமும் பொழுதொரு டிராபிக் ரூல்ஸுமாக மாற்றிக் கொண்டிருக்கின்றனர். தங்கத்தின் விலையைக் கூட கணித்து விடலாம் போல. இங்கு எப்போது அடைப்பார்கள், ஏன் திறக்கிறார்கள் என்று வாகன ஓட்டிகளால் கணிக்கவே முடியாது.
ஆடிஸ் வீதிக்குச் செல்ல வழி இருக்கும் என நம்பி வந்தால், அடைத்திருக்கிறது. பொதுஜனம் முதல் போலீஸ்காரர் வரை 'ஒன் வே'யில் செல்கின்றனர். அவிநாசி ரோடு மேம்பாலம் திறந்து 5 மாதங்களாயிற்று. இன்னுமா இங்கு டிராபிக்கை கணிக்க முடியல. சீக்கிரம் இதுக்கு ஒரு எண்டு கார்டு போடுங்க ஆபிசர்ஸ்!
