/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
30 லட்சம் வாகனங்களுக்கு இந்த ரோடு போதுமா? சிக்கித் திணறுது! கோவை; சாலை மேம்பாடு கட்டாயம் தேவை

ADDED : நவ 25, 2025 05:58 AM

கோவை: அதிவேகத்தில் வளரும் கோவையின் சாலைக் கட்டமைப்பில் போதிய கவனம் செலுத்தாத அரசுகளால், நகரம் நெரிசலில் திணறி வருகிறது.
கோவையில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 2020ல் 23 லட்சத்து 77 ஆயிரத்து 904. இது, 2019ல் 22 லட்சத்து 77 ஆயிரத்து 814 ஆக இருந்தது. ஒரே ஆண்டில் 1 லட்சம் வாகனங்கள் அதிகரித்துள்ளன.
2016ல் 19 லட்சத்து 3,910 ஆக இருந்த வாகனங்கள், நான்கு ஆண்டுகளில் 4.74 லட்சம் அதிகரித்துள்ளன. சராசரியாக ஆண்டுக்கு ஒரு லட்சத்துக்கும் கூடுதலான புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அந்த வளர்ச்சி வேகத்தைக் கணக்கிட்டால், தற்போது 30 லட்சத்துக்கும் கூடுதலான வாகனங்கள் கோவையில் உள்ளன. ஆனால், இவ்வளவு வாகனங்களைக் கையாளும் அளவுக்கு, கோவையின் சாலை உட்கட்டமைப்பு இல்லை.
கோவையின் பொருளாதார வளர்ச்சி, தொழில்வளர்ச்சி, மக்கள்தொகை பெருக்கம், கோவை சுற்றுப்பகுதிகளின் நகர்மயமாகும் வேகம், இவற்றையெல்லாம் கணக்கிட்டால், சாலை உட்கட்டமைப்புகளை அதிகரிக்க வேண்டியது அத்தியாவசியம்.
ஏற்கனவே, கோவை சாலை விபத்துகளின் தலைநகரமாக மாறி வருகிறது. போதாக்குறையான சாலை உட்கட்டமைப்பு இதற்கு முக்கிய காரணம். பாதுகாப்பு, உயர்வான வாழ்க்கைத் தரத்தை எதிர்நோக்கும் கோவையில், சாலை உள்கட்டமைப்பை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை.