/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
/
சித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
ADDED : நவ 25, 2025 05:58 AM
தொண்டாமுத்துார்: தொண்டாமுத்துாரில் உ ள்ள சித்தி விநாயகர் கோயிலில், கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது.
மூத்த பிள்ளையார் வழிபாடு, புற்று மண் எடுத்தல், முளைப்பாலிகை வழிபாடு, காப்பு கட்டுதல், தீர்த்தக்குடம் மற்றும் முளைப்பாலிகை எடுத்து வருதல், தீர்த்தகுடங்கள் வழிபாடு நடந்தது.
அதன்பின், மாலை, முதல் கால வேள்வி நடந்தது. நேற்று முன்தினம், காலை 7:00 மணிக்கு, இரண்டாம் கால வேள்வி நடந்தது. தொடர்ச்சியாக, காலை, 8:50 மணிக்கு, வேள்விசாலை மண்டபத்தில் இருந்து, கலசகுடங்கள் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து, காலை 9:05 மணிக்கு, மங்கள வாத்தியங்கள் முழங்க, சிவனடியார்கள் தலைமையில், விமான கலசங்கள், சித்திவிநாயகருக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து, சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

