sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கழிவு நீரால் 'கமகமக்குது' காந்திபுரம் நுாறடி ரோடு நகரின் பிரதான ரோட்டுக்கே இந்த நிலைமையா?

/

கழிவு நீரால் 'கமகமக்குது' காந்திபுரம் நுாறடி ரோடு நகரின் பிரதான ரோட்டுக்கே இந்த நிலைமையா?

கழிவு நீரால் 'கமகமக்குது' காந்திபுரம் நுாறடி ரோடு நகரின் பிரதான ரோட்டுக்கே இந்த நிலைமையா?

கழிவு நீரால் 'கமகமக்குது' காந்திபுரம் நுாறடி ரோடு நகரின் பிரதான ரோட்டுக்கே இந்த நிலைமையா?


ADDED : ஜன 15, 2024 12:44 AM

Google News

ADDED : ஜன 15, 2024 12:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடும் துர்நாற்றம்


கோவைப்புதுார், 90வது வார்டு, எம்.ஜி.ரோடு, பழைய போலீஸ் குடியிருப்பு அருகில், காலியிடத்தில் தொடர்ந்து குப்பை கொட்டப்படுகிறது. இவற்றை நாய்கள் இழுத்து ரோட்டில் சிதறவிடுகின்றன. இதனால், குடியிருப்பு பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது.

- பாலாஜி, கோவைப்புதுார்.

தொடரும் விபத்து


காரமடை, தோலம்பாளையம் ரோடு, ரயில்வே கேட் அருகில், மங்களக்கரை புதுார் செல்லும் வழியில், ஏராளமான கான்கிரீட் லாரிகள் செல்கின்றன. இவ்வாகனங்கள் செல்லும் போது, கான்கிரீட் கலவையை சாலையில் கொட்டிச்செல்கின்றன. சாலையில் கலவை இறுதி மேடாகி விடுவதால், விபத்து நடக்கிறது.

- மோகன்ராஜ், காரமடை.

தரமற்ற பணி


புலியகுளம், மசால் வீதியில், குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகியது. குழாய் உடைப்பை சரிசெய்த பணியாளர்கள், குழியை சரியாக மூடவில்லை. வண்டிகள் செல்வதால், மீண்டும் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது.

- நெல்சன் வில்லியம்ஸ், புலியகுளம்.

மாணவர்கள் பாதிப்பு


மசக்காளிபாளையம், விஷ்ணு வித்யாலயா பள்ளியில், சாலையோரம் மலை போல குப்பை குவிந்துள்ளது. இதனால், அருகிலுள்ள குடியிருப்பு மற்றும் பள்ளி வளாகம் முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. குழந்தைகளுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது.

- ரோகித், மசக்காளிபாளையம்.

சாலையெங்கும் பள்ளம்


பன்னீர்மடை, முல்லை நகரில், சாலை மோசமாக சேதமடைந்துள்ளது. சாலையெங்கும் பெரிய, பெரிய குழிகளாக காணப்படுகின்றன. மழைக்காலங்களில் இக்குழிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது.

- முரளி, முல்லைநகர்.

மணலில் சறுக்கும் வாகனங்கள்


சமீபத்தில் பெய்த மழைக்கு, சாலையோரங்களில் பெருமளவு மண் சேர்ந்துள்ளது. பைக்கில் செல்வோர் சறுக்கி விழுகின்றனர். அவிநாசி ரோடு, சின்னியம்பாளையம் பகுதியில் இதனால் அதிக விபத்து ஏற்படுகிறது.

- ராம், பீளமேடு.

சாலையை மறைக்கும் புதர்கள்


சத்தி ரோடு, அம்மன் கோவில் பேருந்து நிறுத்தம் முதல், காளப்பட்டி பிரிவு பகுதி வரை, சாலை நடுவே கோரைப்புற்கள் அதிகம் வளர்ந்துள்ளது. திருப்பத்தில், எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை.

- ஜெய்கணேசன், சரவணம்பட்டி.

சேதமடைந்த மின்கம்பம்


கணபதி, 19வது வார்டு, சி.எம்.எஸ்.பள்ளி பின்புறம், அலமேலு மங்காபுரம், மூன்றாவது வீதியில் உள்ள, 'எஸ்.பி -41, பி- 4' என்ற எண் கொண்ட கம்பம் மோசமாக சேதமடைந்துள்ளது. கான்கிரீட் பெயர்ந்து கம்பிகள் வெளியே நீட்டிக்கொண்டிருக்கின்றன.

- ராஜம்மாள், கணபதி.

பல மாதங்களாக எரியா விளக்கு


குறிச்சி, 96வது வார்டு, ரவுண்ட் ரோட்டில், ' எஸ்.பி - 3, பி-12' என்ற எண் கொண்ட கம்பத்தில் தெருவிளக்கு பல மாதங்களாக எரியவில்லை. இரவு நேரங்களில் வெளியில் செல்ல அச்சமாக உள்ளது.

- சுரேந்திரன், குறிச்சி.

தொங்கிய நிலையில் தெருவிளக்கு


போத்தனுார், செட்டிபாளையம் சாலை,விநாயகர் கோவில் வீதியில் உள்ள மின்கம்பத்தில் தெருவிளக்கை சரியாக பொருத்தவில்லை. விளக்கு தொங்கிக் கொண்டிருக்கிறது.

- பத்ரி, போத்தனுார்.

மோசமான சாலை


சேரன்மாநகர், 22வது வார்டு, குமுதம் நகர், மின்கம்பங்கள் 11 மற்றும் 13ல் கடந்த ஒரு மாதமாக தெருவிளக்கு எரியவில்லை. தார் சாலை அமைக்காததால், மழைக்காலங்களில் மண்சாலை சேறும், சகதியுமாக மாறி விடுகிறது.

- கேசவன், சேரன்மாநகர்.

சாலையில் ஓடும் கழிவுநீர்


காந்திபுரம், 100 அடி ரோடு, கமலா ஸ்டோர் முன்பு சாலையில் திறந்தவெளியில் கழிவுநீர் செல்கிறது. இதனால், அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. தேங்கி நிற்கும் நீரில் கொசு உற்பத்தியும் அதிகம் உள்ளது.

- கார்த்திக், காந்திபுரம்.






      Dinamalar
      Follow us