/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஈஷா கிராமோற்சவ போட்டி; வரும் 16ம் தேதி துவக்கம்
/
ஈஷா கிராமோற்சவ போட்டி; வரும் 16ம் தேதி துவக்கம்
ADDED : ஆக 06, 2025 10:33 PM
கோவை; 'ஈஷாவின் கிராமோற்சவம்' எனும் கிராமப்புற விளையாட்டு திருவிழா, வரும் 16ம் தேதி துவங்குகிறது.
இதில் ஆண்களுக்கான வாலிபால், பெண்களுக்கான த்ரோபால் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா தவிர, முதல் முறையாக ஒடிசா உள்ளிட்ட 6 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும் போட்டிகள் நடக்கின்றன.
போட்டிகள் மூன்று நிலைகளில் நடைபெறும். மூன்று நிலைகளிலும் சேர்த்து, மொத்த பரிசுத் தொகையாக ரூ.67 லட்சம் வரை வழங்கப்பட உள்ளது.
கிராமப்புற அணிகள் இலவசமாக பங்கேற்கலாம். முன்பதிவு செய்வது கட்டாயம். முன்பதிவுக்கு, isha.co/gramotsavam மற்றும் 83000 30999 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
சத்குரு கூறுகையில், “ஈஷா கிராமோற்சவம், விளையாட்டின் வாழ்க்கையை கொண்டாடும் ஒரு திருவிழா. ஜாதி, மதம் மற்றும் பிற அடையாளங்களின் எல்லைகளை, உற்சாகமான விளையாட்டு வாயிலாக அழிக்க முடியும்,'' என்றார்.