/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஈஷா காவேரி கூக்குரல் மரக்கன்று நட இலக்கு
/
ஈஷா காவேரி கூக்குரல் மரக்கன்று நட இலக்கு
ADDED : ஜூன் 07, 2025 11:31 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டாமுத்தூர்: ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில், தமிழகத்தில் நடப்பாண்டில், 1.21 கோடி மரங்கள் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்காக, மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டன. அதோடு, உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில், 'ஒரு கிராமம் ஒரு அரச மரம்' திட்டத்தின் மூலம், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், நேற்று முன் தினம், அரச மரக்கன்றுகள் நடப்பட்டன.