தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மாணவர்களுக்கு ஈஷா கல்வி உதவித்தொகை

 மாணவர்களுக்கு ஈஷா கல்வி உதவித்தொகை

 மாணவர்களுக்கு ஈஷா கல்வி உதவித்தொகை


ADDED : பிப் 25, 2026 06:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 25, 2026 06:58 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தொண்டாமுத்தூர்: ஈஷா அறக்கட்டளை சார்பில், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, பழங்குடியின மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு, 'சத்குரு ஸ்ரீ பிரம்மா கல்வி உதவித்தொகை' வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு, கல்வி உதவித்தொகை வழங்கும் விழா, ஈஷா யோகா மையத்தில் உள்ள சூரிய குண்டம் மண்டபத்தில் நடந்தது.

ஈஷா யோகா மையத்தை சுற்றியுள்ள சீங்கப்பதி, சாடிவயல், நல்லூர்வயல், முள்ளங்காடு, தானிக்கண்டி, மடக்காடு, சர்க்கார் போரத்தி உள்ளிட்ட பழங்குடியின கிராமங்கள் மற்றும் ஆலாந்துறை இருட்டுப்பள்ளம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த, 40க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு, கல்வி உதவித் தொகையை ஈஷா பிரம்மச்சாரிகள் வழங்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us