/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தமிழ் பண்பாட்டின் செழுமையை காட்சிப்படுத்திய 'ஈஷா தமிழ் தெம்பு'
/
தமிழ் பண்பாட்டின் செழுமையை காட்சிப்படுத்திய 'ஈஷா தமிழ் தெம்பு'
தமிழ் பண்பாட்டின் செழுமையை காட்சிப்படுத்திய 'ஈஷா தமிழ் தெம்பு'
தமிழ் பண்பாட்டின் செழுமையை காட்சிப்படுத்திய 'ஈஷா தமிழ் தெம்பு'
ADDED : மார் 22, 2025 11:17 PM

தமிழர் செழுமையை, வரலாற்று பெருமையை, மொழியின் வளமையை, அப்படியே மக்களிடையே கொண்டு சென்றது ஈஷா 'தமிழ்த் தெம்பு திருவிழா'.
கடந்த மூன்று ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வரும் இவ்விழா, முந்தைய ஆண்டுகளை விட நடப்பாண்டு மிக பிரம்மாண்டமாக நடந்தது.
திருவிழாவில் தமிழ் மொழியின் செழுமை, தமிழ் அரசர்களின் ஆளுமை, தமிழ் வளர்த்த அடியார்களின் பக்தி, காலத்தால் அழியாத தமிழரின் கட்டடக்கலை, இயற்கையோடு இணைந்த சித்த மருத்துவம், அகிலமே வியக்கும் ஆலயங்கள் என தமிழரின் பெருமையை பறைசாற்றும் வகையிலான தகவல் காட்சி அரங்குகள் இடம்பெற்று இருந்தன. தமிழ் மொழியை பக்தியால் வளர்த்த, 63 நாயன்மார்கள் அரங்கில் நாயன்மார்களின் செப்புத் திருமேனிகளுடன் அவர்களின் வாழ்க்கை வரலாறும் காட்சிப்படுத்தபட்டு இருந்தது.
300 ஆண்டுகள் பழமையான, பல கோடி ரூபாய் மதிப்புள்ள, கருப்பூர் கலம்காரி ஓவிய கண்காட்சியை, மக்கள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.