தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இஸ்லாமிய இயக்கங்கள் பேரணி, ஆர்ப்பாட்டம்

இஸ்லாமிய இயக்கங்கள் பேரணி, ஆர்ப்பாட்டம்

இஸ்லாமிய இயக்கங்கள் பேரணி, ஆர்ப்பாட்டம்


ADDED : ஏப் 11, 2025 10:58 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 11, 2025 10:58 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை; வக்ப் வாரிய சட்டத் திருத்தத்திற்கு எதிராக அனைத்து ஜமாத்துகள் மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள் சார்பில் நேற்று கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்ப் வாரிய சட்ட திருத்தத்தை எதிர்ந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு தரப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட அனைத்து ஜமாத்துகள், இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடந்தது. கண்டன பேரணி, கோவை மாவட்ட அனைத்து ஜமாத்துகள், இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பின் நிர்வாகிகள் இனாயதுல்லா, சுல்தான் அமீர், சபீர் அலி ஆகியோர் தலைமையில் ஆத்துப்பாலத்தில் இருந்து உக்கடம் வள்ளியம்மை பேக்கரி வரை நடந்தது. இதில் சிறுவர்கள், பெண்கள் என மூன்றாயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படாது என்று அறிவித்ததுபோல, தமிழ்நாட்டில் வக்ப் திருத்தச் சட்டமும் நடைமுறைக்கு கொண்டு வரப்படாது என்று முதல்வர் அறிவிக்க வேண்டும், வக்ப் சட்டத் திருத்தத்தை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.

பேரணியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் காயல் மகபூப், அடையாறு இமாம் சதீதுதீன், ஜாக் அமைப்பின் முன்னாள் மாநில பொதுச்செயலாளர் நுார் முகமது ஆகியோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us