/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குளிர்பதன கிடங்கை திறக்க நல்ல நாள் கிடைக்கலையோ
/
குளிர்பதன கிடங்கை திறக்க நல்ல நாள் கிடைக்கலையோ
ADDED : அக் 30, 2025 12:17 AM
கோவை:  அறுவடைக்கு பின் ஏற்படும் இழப்பை தவிர்க்கவும், காய்கறிகள், பழங்களின் தரம் குறையாமல், அவற்றின் ஆயுள் காலத்தை நீட்டிக்கவும், வேளாண் வணிகப்பிரிவு வாயிலாக, குளிர்பதன கிடங்குகள் தேவைப்படும் இடங்களில் கட்டப்படுகின்றன.
அவ்வகையில், தொண்டாமுத்துார் பகுதியில் காய்கறி, பழங்கள் சாகுபடி அதிகம் உள்ளதால், 2024 டிச., மாதம் குளத்துப்பாளையம் பகுதியில், 25 டன் வீதம் நான்கு பிரிவுகளாக 100 டன் கொள்ளளவு குளிர்பதன கிடங்கு அமைக்கும் பணி துவக்கப்பட்டது. இதற்கென, 92.4 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டது. பிப். இறுதியில் பயன்பாட்டுக்கு வருமென விவசாயிகள் எதிர்பார்த்தனர். இன்று வரை இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை.
விவசாயிகள் நலச்சங்க தலைவர் கந்தசாமி கூறுகையில், ''குளிர்பதன கிடங்கு கட்டுமான பணி முடிந்து விட்டதால், விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்,'' என்றார்.
வேளாண் விற்பனை மற்றும் வணிக பிரிவு அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, 'கட்டுமான பணிகள் முடிந்து விட்டன. இயந்திரங்களில் சிறு கோளாறு இருந்தது; அவை மாற்றி பொருத்தப்பட்டுள்ளன. விரைவில் திறக்கப்படும்' என்றார்.

