தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/தினகரன் சொல்வது ஒரு பொருட்டல்ல! அமைச்சர் அருண்ராஜ் பேட்டி

தினகரன் சொல்வது ஒரு பொருட்டல்ல! அமைச்சர் அருண்ராஜ் பேட்டி

தினகரன் சொல்வது ஒரு பொருட்டல்ல! அமைச்சர் அருண்ராஜ் பேட்டி


UPDATED : நவ 15, 2026 12:00 AM

ADDED : நவ 14, 2026 10:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 15, 2026 12:00 AM ADDED : நவ 14, 2026 10:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: ‘‘அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பழனிசாமியை அரசியலில் இருந்து அழிப்பதையே ஒரே கொள்கையாகவும், லட்சியமாகவும் கொண்டு செயல்படுபவர் தினகரன். அவர் சொல்வதையெல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை,’’ என, சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் கூறினார்.

முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்தநாளையொட்டி, திருப்பூரில் நேற்று நடந்த சைக்கிள் போட்டியைத் துவக்கி வைத்த இவர், நிருபர்களிடம் கூறியதாவது:

எந்தெந்த காலகட்டங்களில், என்னென்ன முறைகளில் தினகரன் பேசி வருகிறார்; அவர் எப்படி மாற்றி மாற்றிப் பேசுவார் என்பது அனைவருக்கும் தெரியும். பா.ஜ., -–- அ.தி.மு.க., கூட்டணியே கிடையாது எனக் கூறி வருகிறார். பழனிசாமியை அழிப்பதையே தனது அரசியல் கொள்கையாக கொண்டுள்ளார். அவர் சொல்வதையெல்லாம் பொருட்படுத்த வேண்டியதில்லை. தவறு யார் செய்திருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதை முதல்வர் விஜய் உறுதி செய்வார்.

இவ்வாறு, அவர் கூறினார்.

தாராபுரம் எம்.எல்.ஏ., சத்தியபாமா, அமைச்சர் அருண்ராஜிடம் மனு அளித்தது குறித்து கூறுகையில், ‘‘மூலனுாரில் முருங்கை பதப்படுத்தும் தொழிற்சாலை மற்றும் கிடங்கு அமைக்க வேண்டும்.

பதப்படுத்தும் வசதி இல்லாததால் முருங்கை விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு அரசு உரிய தீர்வு காண வேண்டும்,’’ என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us