ADDED : ஏப் 20, 2026 08:28 PM
அ நிறம் | அளவு
கோவை: சட்டசபை தேர்தலை முன்னிட்டு, சிட்டிசன்ஸ் வாய்ஸ் கோவை என்ற நுகர்வோர் அமைப்பு சார்பில், அதன் நிர்வாகிகள் ஜெயராமன், ராஜேந்திரன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை:
எந்தவொரு அரசியல் கட்சியின் மீதும் பாரபட்சம் காட்டாமல், சாமானிய குடிமக்களின் அன்றாட பிரச்னைகளை தீர்ப்பதில் வேட்பாளர்களுக்கு உண்மையான அக்கறை உள்ளதா என்பதை சிந்தித்து, பொதுமக்கள் பொறுப்புடன் வாக்களிக்க வேண்டும்.
மக்கள் வெறும் வாக்குறுதிகளை மட்டும் எதிர்பார்க்கவில்லை, காலக்கெடுவுடன் கூடிய உண்மையான செயல்பாட்டை எதிர்பார்க்கின்னறனர். உண்மையுடன் நேர்மையுடன் உழைப்பவர்களுக்கு மட்டுமே மக்கள் வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
