/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை முதலிடம் பிடிப்பது சாத்தியமே! உரிய பயிற்சியளிப்பது அவசியம்
/
கோவை முதலிடம் பிடிப்பது சாத்தியமே! உரிய பயிற்சியளிப்பது அவசியம்
கோவை முதலிடம் பிடிப்பது சாத்தியமே! உரிய பயிற்சியளிப்பது அவசியம்
கோவை முதலிடம் பிடிப்பது சாத்தியமே! உரிய பயிற்சியளிப்பது அவசியம்
ADDED : அக் 25, 2025 12:30 AM
கோவை: 'முதல்வர் கோப்பை' போட்டியில், இந்தாண்டும் கோவை மூன்றாம் இடத்தை தக்கவைத்த நிலையில், கூடுதல் கட்டமைப்பு வசதிகளுடன், வீரர்களுக்கு திட்டமிட்ட பயிற்சி அளித்தால் முதலிடத்துக்கு முன்னேறலாம் என்கின்றனர் பயிற்சியாளர்கள்.
தமிழகம் முழுவதும் வீரர், வீராங்கனைகளிடம் மறைந்துள்ள திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக, ஆண்டுதோறும் 'முதல்வர் கோப்பை' விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்தாண்டு, மாவட்ட அளவிலான போட்டிகள் கடந்த ஆக., 26 முதல் செப்., 10 வரை நடந்தது.
கோவைக்கு மூன்றாமிடம் கோவை மாவட்டத்தில் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், அரசு ஊழியர்கள், பொதுப்பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் என, 53 ஆயிரத்து 576 பேர் பதிவு செய்திருந்தனர். 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
தடகளம், டென்னிஸ், கூடைப்பந்து, கால்பந்து என, 37 வகையான விளையாட்டு பிரிவுகளில், 196 போட்டிகள் நடத்தப்பட்டன. மாவட்ட போட்டிகளை அடுத்து மாநில அளவிலான போட்டிகள் நடந்தன. நிறைவில், சென்னை, 109 தங்கம், 90 வெள்ளி, 82 வெண்கலம் என, 281 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது.
செங்கல்பட்டு மாவட்டம், 36 தங்கம், 22 வெள்ளி, 30 வெண்கலம் என, 88 பதக்கங்களுடன் இரண்டாம் இடமும், கோவை மாவட்டம் 33 தங்கம், 27 வெள்ளி, 35 வெண்கலம் என, 95 பதக்கங்களுடன் மூன்றாம் இடமும் பிடித்துள்ளது.
கடந்தாண்டும், சென்னை, செங்கல்பட்டு, கோவை ஆகியன முதல் மூன்று இடங்களை பிடித்தன. மூன்றாம் இடத்தை கோவை தக்க வைத்த நிலையில், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, சிறப்பு பயிற்சி அளித்தால் முதல் இடத்துக்கு முன்னேறலாம் என்கின்றனர், விளையாட்டு பயிற்சியாளர்கள்.
பயிற்சியாளர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் கூறியதாவது:
முதல்வர் கோப்பை போட்டிகள் துவங்கும் சில மாதங்களுக்கு முன்பு பள்ளி, கல்லுாரிகளில் தேர்வு போட்டி நடத்தி, சிறந்த வீரர்கள் அடங்கிய அணிகளை உருவாக்கலாம். தொடர்ந்து, சிறப்பு பயிற்சி அளிப்பதுடன், முகாம் வாயிலாக தயார்ப்படுத்தலாம்.
தனி நபர் போட்டிகளில், வீரர்கள் தங்களை தயார்ப்படுத்திக்கொள்வர். ஆனால், குழு போட்டிகளில் வீரர், வீராங்கனைகளை ஒருங்கிணைத்து, திறமைக்கேற்ப தயார்ப்படுத்த வேண்டியிருக்கும்.
பெயரளவுக்கு அணிகள் போட்டிக்கு சில நாட்களுக்கு முன், குறிப்பாக அரசுப் பள்ளிகளில் பெயரளவுக்கு அணிகள் உருவாக்கப்படுவதால், வீரர்களால் தங்கள் திறமையை வெளிப்படுத்த முடிவதில்லை.
எனவே, அணி வீரர்களை தயார்ப்படுத்த, தேர்வு போட்டி நடத்தி முகாமில் பயிற்சி அளிக்க வேண்டும். இந்த முறை நான்கு, ஐந்தாம் இடம் பிடித்து நுாலிழையில் வெற்றி வாய்ப்பை தவறவிட்டவர்கள் மீதும், தனி கவனம் செலுத்தி தயார்படுத்த வேண்டும்.
நீச்சல், துப்பாக்கி சுடுதல் போன்றவற்றுக்கு பயிற்சி எடுக்க, இங்கு போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லை. இடம் கிடைப்பது சிரமமாக உள்ளது. இது போன்ற விஷயங்களில் உரிய கவனம் செலுத்தினால், கோவையை முதலிடத்துக்கு கொண்டு செல்வதில் சிரமம் இருக்காது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
நீச்சல், துப்பாக்கி சுடுதல் பயிற்சி எடுக்க, இங்கு போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லை. இடம் கிடைப்பது சிரமமாக உள்ளது. இது போன்ற விஷயங்களில் உரிய கவனம் செலுத்தினால், கோவையை முதலிடத்துக்கு கொண்டு செல்வதில் சிரமம் இருக்காது.
அணி வீரர்களை தயார்ப்படுத்த, தேர்வு போட்டி நடத்தி முகாமில் பயிற்சி அளிக்க வேண்டும். இந்த முறை நான்கு, ஐந்தாம் இடம் பிடித்து நுாலிழையில் வெற்றி வாய்ப்பை தவறவிட்டவர்கள் மீதும், தனி கவனம் செலுத்தி தயார்படுத்த வேண்டும்.

