/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இடியுடன் தீவிரமாகிறது பருவமழை: அப்போது 'டிவி' பார்ப்பது பிழை
/
இடியுடன் தீவிரமாகிறது பருவமழை: அப்போது 'டிவி' பார்ப்பது பிழை
இடியுடன் தீவிரமாகிறது பருவமழை: அப்போது 'டிவி' பார்ப்பது பிழை
இடியுடன் தீவிரமாகிறது பருவமழை: அப்போது 'டிவி' பார்ப்பது பிழை
ADDED : அக் 25, 2025 12:31 AM
கோவை: வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், பொதுமக்கள் மின்சார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என, தமிழக மின் ஆய்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, முதுநிலை மின் ஆய்வாளர் வெளியிட்ட அறிக்கை :
மின்சார ஒயர்கள் பழுது, பராமரிப்பு வேலைகளை, அரசு உரிமம் பெற்ற நபர்கள், ஒப்பந்ததாரர்கள் வாயிலாக மட்டுமே மேற்கொள்ள வேண்டும். ஐ.எஸ்.ஐ., முத்திரை கொண்ட தரமான மினசாதன பொருட்களை வாங்கி பயன்படுத்த வேண்டும்.
30 எம்.ஏ., ஆர்.சி.டி.,கருவியை, வீடுகளில் பொருத்திக்கொள்வதன் வாயிலாக, மின்கசிவால் ஏற்படும் விபத்துக்களை தடுக்கலாம். பழுதான சாதனங்களை உபயோகிக்காமல், உடைந்த ஸ்விட்ச் போன்றவற்றை உடனடியாக மாற்றிக்கொள்ள வேண்டும். கேபிள் ஒயர்களை மேல்நிலை மின்சார கம்பிகள் அருகில் கொண்டு செல்ல கூடாது.
குளியல், கழிப்பறை போன்ற ஈரம் அதிகமாகும் இடங்களில், ஸ்விட்ச் பொருத்தக்கூடாது. மின்கம்பங்கள், அதை தாங்கும் கம்பங்களில் கால்நடைகளை கட்டக்கூடாது. மின்மாற்றிகள் , மின்சார கம்பிகளுக்கு அருகே மரக்கிளைகளை அகற்ற, மின்வாரியத்தை அணுக வேண்டும்.
இடி அல்லது மின்னல் சமயங்களில், வெட்டவெளியில் நிற்பதோ, குடிசை, மரம், மின்கம்பம், தாழ்வான இடங்களில் நிற்பதையோ தவிர்த்து, பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும்.
இடி, மின்னல் சமயங்களில் டி.வி., மிக்ஸி, கிரைண்டர், தொலைபேசி போன்ற மின்சாதனங்களை பயன்படுத்த வேண்டாம்.
வீட்டில் மின்சாதனங்களில் அதிர்வுகளை உணர்ந்தால், உடனடியாக ரப்பர் காலணிகளை அணிந்து அணைத்துவிட்டு மின்வாரியத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு, அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

