sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'பொறியாளரின் மேற்பார்வையில் வீடு கட்டுவதே பாதுகாப்பானது!'

/

'பொறியாளரின் மேற்பார்வையில் வீடு கட்டுவதே பாதுகாப்பானது!'

'பொறியாளரின் மேற்பார்வையில் வீடு கட்டுவதே பாதுகாப்பானது!'

'பொறியாளரின் மேற்பார்வையில் வீடு கட்டுவதே பாதுகாப்பானது!'


ADDED : ஜன 06, 2024 12:58 AM

Google News

ADDED : ஜன 06, 2024 12:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காலம் போஸ்ட் அமைத்துகட்டடம் கட்டினோமென்றால், அவசியம் ரூப் பீம் அமைத்து அதன் பின்பு தான் கட்டடத்தை முடிக்க வேண்டும் என்கிறார், பொறியாளர் ஜெகதீஸ்வரன்.

கட்டுமானம் தொடர்பான, வாசகர்களின் சந்தேகங்களுக்கு பதிலளிக்கிறார், கோயம்புத்தூர் மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்கம் (காட்சியா) நிர்வாக அலுவலர் ஜெகதீஸ்வரன்.

கட்டடத்தின் பேஸ்மட்டத்துக்கு மேல் காலம் போஸ்ட் கான்கிரீட் போடாமல் 7 அடி உயரம் செங்கல் சுவர் கட்டியபிறகு, பலகையில் சைடு அடித்து காலம் கான்கிரீட் போடலாம் என்கிறார் மேஸ்திரி. அவ்வாறு செய்யலாமா?

-குமரேசன், பாப்பம்பட்டி.

இது ஒரு தவறான கட்டுமான முறை. காலம் போஸ்ட் கான்கிரீட் போட்டபிறகு தான் செங்கல் சுவர் கட்ட வேண்டும். ஒரு பொறியாளரின் ஆலோசனை மற்றும் மேற்பார்வையில் கட்டடம் கட்டினால், இதுபோன்று தவறுகள் நடப்பதை தவிர்க்கலாம்.

நான் கட்டி வரும் கட்டடத்துக்கு, காலம் போஸ்ட் போட்டு வீடுகட்டி வருகிறேன், தற்போது லின்டல் மட்டம் வரை கட்டடப்பணிகள் நிறைவடைந்துள்ளது. காலம் போஸ்ட் இருப்பதால் ரூப் பீம் வேண்டாம் என்கிறார் கான்ட்ராக்டர். பீம் கான்கிரீட் போட வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதை தெரிவிக்கவும். பீம் போட்டால் அதற்கு தனியாக பணம் தரவேண்டும் என்று கேட்கிறார். இரண்டு மாடிகள் கட்டவுள்ளேன். என்ன செய்யலாம்.

-ராஜ்குமார், சூலுார்.

பெரும்பாலானோர் இதுபோன்று தவறுகள் செய்கின்றனர். காலம் போஸ்ட் போட்டு கட்டினால், அவசியம் ரூப் பீம் போடவேண்டும். நீங்கள் கிரவுண்ட் ப்ளோர் மட்டும் கட்டினாலும், அவசியம் ரூப் பீம் கான்கிரீட் போட வேண்டும். இல்லையேல் காலம் போஸ்ட் போட்டதற்கான பயன் இல்லை.

நான் புதியதாக வீடு கட்ட திட்டமிட்டுள்ளேன். ஒவ்வொரு அறைக்கும் எத்தனை ஜன்னல்கள் வைக்க வேண்டும்.

-ரகுபதி, சின்னியம்பாளையம்

ஒவ்வொரு அறையிலும், வெளிச்சம் அவசியம். அதைவிட, உஷ்ணத்தை குறைக்க அல்லது உஷ்ணத்தை வெளியேற்ற, காற்றோட்டம் அவசியம்.

வீட்டின் எந்த அறையாக இருந்தாலும், குறைந்தது இரண்டு ஜன்னல்கள் வைக்க வேண்டும். அறையின் நீளம், அகலம் மற்றும் பரப்பளவிற்கு ஏற்ப ஜன்னல் எண்ணிக்கையை கூட்டலாம் அல்லது அளவை பெரிதாக வைக்கலாம்.

வணிக கட்டடம் மற்றும் வீடுகளுக்கு இண்டியன் க்ளோசட், வெஸ்டர்ன் க்ளோசட் இதில் எதை வைப்பது?

--ஜெயக்குமார் நீலிக்கோணம்பாளையம்

இப்பொழுது பெரும்பாலும், வெஸ்டர்ன் க்ளோசட்தான் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் இண்டியன் க்ளோசட் தான் சிறந்தது. வீடு, வணிக வளாகம் எங்கும் குழந்தைகள் பயன் படுத்துவதற்கு வசதியாக, கட்டாயம் ஒரு இண்டியன் கிளோசட் வைத்தல் நல்லது.

நான் வசிக்கும் ஹாஸ்டலின் குளியலைறைகள் மற்றும் கேன்டீனில் கைகழுவும் இடங்களில், அதிக அளவு தண்ணீரை திருப்பி வீணாக்குகிறார்கள். தண்ணீர் வீணாவதை தடுக்க என்ன செய்வது?

--ஆனந்தன், கிணத்துக்கடவு

ஹாஸ்டல்களில் கேன்டீன் மற்றும் குளியல் அறைகளின் பைப்புகளை, சாதாரணமாக திருப்பிவிடும் பைப்புகளாக அல்லாமல், அவற்றை மாற்றி 'புஷ்காக் பைப்புகளாக' மாற்றினால், தண்ணீர் வீணாவதை தடுக்கலாம். தண்ணீர் சிக்கனம் மற்றும் தண்ணீர் சேமிப்பு பற்றிய விழிப்புணர்வை அவர்களுக்கு எடுத்துரைக்கலாம்.

மழை காரணமாக, குடியிருப்பு பகுதிகளில் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க என்ன செய்யலாம்?

-சீனிவாசன், பேரூர்

ஆக்கிரமிப்பே காரணம்

வனவிலங்குகள் வந்து செல்லும் பாதைகளை ஆக்கிரமிப்பு செய்து. பாதையைமறித்து கட்டடம் கட்டினால், அவை மக்கள் வசிக்கும் ஊருக்குள் வருவது போல, ஏரி, குளம், குட்டை போன்ற நீர்நிலைகளையும் மழைக்காலத்தில், மழைநீர் வடிந்து செல்லும் நீரோடை பாதைகளையும் ஆக்கிரமித்து, அவை வடிந்து செல்லும் பாதையை மறித்து, கட்டடங்கள் கட்டினால், இதுபோன்று பாதிப்புகள் ஏற்படலாம்.எனவே வீடோ, மனையோ வாங்கும் போது அந்த இடத்திற்கு முன், என்ன பயன்பாட்டில் இருந்தது என்பதை, சம்பந்தப்பட்ட துறையில் விசாரித்தால், இது போன்ற பாதிப்புகளை தவிர்க்கலாம்.








      Dinamalar
      Follow us