/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிகவும் அவசியம்
/
புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிகவும் அவசியம்
புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிகவும் அவசியம்
புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிகவும் அவசியம்
ADDED : ஜூன் 26, 2025 11:38 PM
'சமூக வலைதளங்களிலும் ஆதாரம் இல்லாத நபர்களிடம் இருந்து பரப்பப்படும் தவறான தகவல்களையும் நம்பி, புற்றுநோய்க்கு தவறான சிகிச்சை பெற முயற்சிக்க வேண்டாம்,' என, கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை புற்றுநோய் கதிர்வீச்சு சிகிச்சை நிபுணர் டாக்டர் ஆனந்த் நாராயண் கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது:
புற்றுநோய் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததால், ஆரம்ப நிலை அறிகுறிகள், அதன் பாதிப்பு நிலைகள் குறித்து தெரியாமல், தீவிர நிலையில் சிகிச்சைக்கு வரும் நிலை உள்ளது; குணப்படுத்துவதில் சிக்கல் ஏற்படுகிறது.
மேலும், நோயாளிகளின் வசிப்பிடம் மற்றும் பொருளாதார நிலை ஆகியவையும் சிகிச்சை எடுத்துக்கொள்வதில் காலம் தாழ்த்த செய்கிறது. கிராமப்புறங்களில் வசிப்போர் புற்று நோய் சிகிச்சைக்கு நீண்ட துாரம் செல்ல வேண்டியுள்ளது; செலவும் இதில் முக்கியக்காரணமாகிறது.
புற்றுநோயின் பாதிப்புகள் குறித்து நன்கு அறிந்தவர்கள் கூட, தவறான அல்லது நிரூபிக்கப்படாத சிகிச்சை முறையை நாடி செல்கின்றனர். சமூக வலைதளங்களிலும் ஆதாரம் இல்லாத நபர்களிடம் இருந்து பரப்பப்படும் தவறான தகவல்களையும் நம்பி, பொய்யான சிகிச்சைகளில் நேரத்தை வீணாக்குகின்றனர். சிலர் பயம் மற்றும் சிகிச்சையால் ஏற்படும் விளை வுகள் காரணமாகவும் சிகிச்சையை தவிர்க்கும் சூழல் உள்ளது. இதற்கு தீர்வு காண புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிகவும் அவசியமாகிறது.
புற்றுநோய் வருவதை நுாறு சதவீதம் தடுக்க முடியாது. ஆனால், சில வாழ்க்கை முறை மாற்றங்களாலும், விழிப்புணர்வு வாயிலாகவும் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும். நுரையீரல், தொண்டை புற்றுநோய்க்கு புகையிலையும், கல்லீரல், மார்பக புற்றுநோய்க்கு மதுப்பழக்கமும் காரணமாக உள்ளது. வலி இல்லாத கட்டி, ஆறாத புண், தொடர் இருமல், திடீர் எடைக்குறைவு, மலச்சிக்கல் புற்று நோய்க்கான பிரதான அறிகுறிகளாகும். இரண்டு வாரங் களுக்கும் மேல் இந்த அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். தேவையான பரிசோதனைகள் மேற்கொண்டு ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, சிகிச்சை பெற்றால் நல்ல பலன் கிடைக்கும்.
கே.எம்.சி.எச்.,ல் புற்றுநோய்க்கான சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இதற்கென அனைத்து நவீன பரிசோதனை கருவிகள் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. மேலும் விவரங்களுக்கு, 87548- 87568 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.