/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குழிகளை தோண்ட தெரிகிறது... மூடத்தெரிவதில்லை! ராமகிருஷ்ணாபுரம், நேரு நகர் முதலாவது வீதியே சிறந்த உதாரணம்
/
குழிகளை தோண்ட தெரிகிறது... மூடத்தெரிவதில்லை! ராமகிருஷ்ணாபுரம், நேரு நகர் முதலாவது வீதியே சிறந்த உதாரணம்
குழிகளை தோண்ட தெரிகிறது... மூடத்தெரிவதில்லை! ராமகிருஷ்ணாபுரம், நேரு நகர் முதலாவது வீதியே சிறந்த உதாரணம்
குழிகளை தோண்ட தெரிகிறது... மூடத்தெரிவதில்லை! ராமகிருஷ்ணாபுரம், நேரு நகர் முதலாவது வீதியே சிறந்த உதாரணம்
ADDED : ஜன 08, 2024 01:41 AM

விளக்கை சரிசெய்யணும்
சிங்காநல்லுார், 63வது வார்டு, வேளாளர் வீதியில், 'எஸ்.பி -26, பி-5' என்ற எண் கொண்ட கம்பத்தில், கடந்த ஒரு வாரமாக தெருவிளக்கு எரியவில்லை. பழுதான விளக்கை விரைந்து சரிசெய்ய வேண்டும்.
- துரை சிவக்குமார், சிங்காநல்லுார்.
சேறும், சகதியுமான ரோடு
கணபதி, ராமகிருஷ்ணாபுரம், நேரு நகர், முதலாவது வீதியில், குழாய் பதிப்புக்காக தோண்டிய குழிகளை சரிவர மூடவில்லை. குழிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. மழைக்காலங்களில், மண்சாலை சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது.
- சரண்யா, கணபதி.
துரத்தும் நாய்கள்
கோவைப்புதுார், 91 மற்றும் 90வது வார்டில், பத்துக்கும் மேற்பட்ட நாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றுகின்றன. இரவு நேரங்களில், நடந்து செல்வோர் மற்றும் பைக்கில் செல்வோரை, நாய்கள் துரத்தி அச்சுறுத்துகின்றன.
- பாலாஜி, கோவைப்புதுார்.
நிரம்பி வழியும் தொட்டி
உப்பிலிபாளையம், சிவா நகரில் தொட்டியில் குப்பை நிரம்பி, சாலையெங்கும் பரவிக்கிடக்கிறது. பல வாரங்களாக குவிந்திருக்கும் கழிவுகளால், குடியிருப்பு பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது.
- பிரவீன், உப்பிலிபாளையம்.
சாலை முழுவதும் ஆக்கிரமிப்பு
மாநகராட்சி, 100வது வார்டு, கார்மல் நகரில், இட்டேரி ரோட்டில் சாலை முழுவதும் அதிக ஆக்கிரமிப்புகள் உள்ளன. வாகனங்கள் செல்ல மிகுந்த இடையூறாக உள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்ற, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஆனந்த், கார்மல் நகர்.
ஆள் விழுங்கும் சாக்கடை
ஆவாரம்பாளையம், ராமசாமி லே-அவுட்டில், சரிவர துார்வாராத சாக்கடையில் குப்பை அடைத்து, கழிவுநீர் தேங்கி நிற்கிறது. சாக்கடையில் சிலேப்புகள் உடைந்து, திறந்தநிலையில் உள்ளது. சிறு குழந்தைகள் சாக்கடையில் விழும் ஆபத்து உள்ளது.
- ராஜலட்சுமி, ஆவாரம்பாளையம்.
குழாய் உடைந்து தண்ணீர் வீண்
மேட்டுப்பாளையம், மகாதேவபுரம் மெயின் ரோடு, பத்ரகாளியம்மன் கோவில் செல்லும் வழியில், கடந்த நான்கு மாதங்களாக குழாய் உடைந்து, தண்ணீர் வீணாகிறது. இந்த தண்ணீர், சாலையில் உள்ள குழியில் தேங்கி நிற்கிறது. வாகனஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
- சிவா, மகாதேவபுரம்.
எரியா விளக்கு
பாப்பநாயக்கன்புதுார் முல்லை நகர், நான்காவது வீதியில், 'எஸ்.பி - 24, பி -6' என்ற எண் கொண்ட கம்பத்தில், கடந்த சில நாட்களாக தெருவிளக்கு எரியவில்லை. கடும் இருளால், இரவு, 7:00 மணிக்கு மேல் வெளியில் செல்ல பாதுகாப்பில்லை.
- வெங்கடேஷ், முல்லை நகர்.
நோய் தொற்று அபாயம்
நாயக்கன்பாளையம், அண்ணா நகரில், புதிதாக கட்டிய சாக்கடை கால்வாயில் சிலர் மண்ணை கொட்டி, ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால், கழிவுநீர் செல்ல வழியின்றி அடைத்து நிற்கிறது. தேங்கி நிற்கும் கழிவுநீரால், நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது.
- ஈஸ்வரி,
அண்ணாநகர்.
சேதமடைந்த கம்பம்
கிழக்கு மண்டலம், 24வது வார்டு, கம்பம் எண் 73 மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளது. கம்பத்தின் அடியில் கான்கிரீட் பெயர்ந்து, வெறும் கம்பிகளாக தெரிகிறது.
- வேலுமணி, 24வது வார்டு.
வீணாகும் மின்சாரம்
மலுமிச்சம்பட்டி, ஆவின்நகர் பேருந்து நிறுத்தம் அருகே மின்கம்பத்தில், மதியம் வரை தெருவிளக்கு எரிகிறது. பல நாட்களாக இதேபோல் பகலில் எரியும் விளக்கால், பெருமளவு மின்சாரம் வீணாகிறது.
- தங்கவேல், மலுமிச்சம்பட்டி.
விபத்துக்குள்ளாகும் வாகனஓட்டிகள்
தெலுங்குபாளையம், 76வது டிவிசனில் சாலையில் ஐந்துக்கும் மேற்பட்ட குதிரைகள் நடமாடுகின்றன. போக்குவரத்துக்கு மிகவும் இடையூறாக உள்ளது. திடீரென சாலையில் ஓடும் குதிரைகளால், வாகனஓட்டிகள் விபத்திற்குள்ளாகின்றனர்.
- மாலதி, தெலுங்குபாளையம்.
கால் வாரும் ஒயர்கள்
பாலக்காடு மெயின் ரோடு, குனியமுத்துாரில், சாலை தடுப்புகள் அருகே இருக்கும் கம்பங்களில் வலைபோல கேபிள் ஒயர்கள் சுற்றப்பட்டுள்ளன. பாதசாரிகள் ஒயர்களில் சிக்கி விழுகின்றனர்.
- இளவரசன், குனியமுத்துார்.