/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திங்கள் கிழமை மிக கனமழை பெய்யும்
/
திங்கள் கிழமை மிக கனமழை பெய்யும்
ADDED : நவ 29, 2024 11:55 PM
கோவை: வரும் வாரத்தில் கன மழை முதல் மிகக் கனமழை பெய்யும் என, வேளாண் கால நிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இன்று முதல் வரும் 4ம் தேதி வரை, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்யக்கூடும். குறிப்பாக வரும் 2ம் தேதி, மிகக் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றும், நாளையும் கோவை மாவட்டம் முழுதும் பரவலாக லேசான மழை பெய்யக்கூடும்.
வரும் 2ம் தேதி, ஆனைமலை 12.9 மி.மீ., அன்னூர் 15.6, காரமடை 17.6, கிணத்துக்கடவு 16.4, மதுக்கரை 21, பெ.நா.பாளையம் 15.6, பொள்ளாச்சி வடக்கு மற்றும் தெற்கு 9.0, சர்க்கார் சாமக்குளம் 15.3, சுல்தான்பேட்டை, 13.4., சூலூர் 19.8, தொண்டாமுத்தூர் 28 மி.மீ., மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 3ம் தேதி, குறைந்தபட்சம் 17.7 மி.மீ., மழையும், அதிகபட்சம் 30.6 மி.மீ., மழையும் இப்பகுதியில் பெய்யும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு, வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.