/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நிதி ஒதுக்கி பத்து மாசம் ஆச்சு; தொட்டி கட்டும் பணி துவங்கலே
/
நிதி ஒதுக்கி பத்து மாசம் ஆச்சு; தொட்டி கட்டும் பணி துவங்கலே
நிதி ஒதுக்கி பத்து மாசம் ஆச்சு; தொட்டி கட்டும் பணி துவங்கலே
நிதி ஒதுக்கி பத்து மாசம் ஆச்சு; தொட்டி கட்டும் பணி துவங்கலே
ADDED : டிச 24, 2024 07:04 AM
அன்னுார்; குன்னத்தூரில், 16 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி, பத்து மாதங்களாகியும் பணி துவங்கவில்லை.
அன்னுார் ஒன்றியத்தில் அதிக தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் உள்ள இரண்டாவது பெரிய ஊராட்சி குன்னத்தூர். இங்கு மேட்டுக்கடை பகுதியில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகள் உள்ளன. இது மேடான பகுதி என்பதால் இங்கு போதுமான குடிநீர் வழங்கப்படுவதில்லை. எனவே இங்கு மேல்நிலைத் தொட்டி கட்டி நீர் நிரப்பி குடியிருப்புகளுக்கு விநியோகிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக மக்கள் கோரி வந்தனர்.
இதையடுத்து, கடந்த பிப். மாதம் அவிநாசி எம்.எல்.ஏ., தனபால், இங்கு 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டி கட்டுவதற்கு, 16 லட்சம் ரூபாய் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கினார்.
இதையடுத்து இப்பணியை நிறைவேற்ற மாவட்ட நிர்வாகம் நிர்வாக அங்கீகாரம் வழங்கியது. ஆனால் அன்னுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பத்து மாதங்களாக இந்த பணி முடங்கி இருக்கிறது.
இதுகுறித்து மேட்டுக்கடை பகுதி மக்கள் கூறுகையில்,' அன்னுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், கோவை கலெக்டர் அலுவலகத்திலும் பலமுறை புகார் தெரிவித்தும், 16 லட்சம் ரூபாய் பத்து மாதங்களாக முடங்கிக் கிடக்கிறது.
குடிநீர் மேல்நிலைத் தொட்டி கட்டுவதற்கான எந்த நடவடிக்கையும் ஒன்றிய அதிகாரிகள் எடுக்கவில்லை. இதனால் இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு தொடர்கிறது.
மாவட்ட நிர்வாகம் விரைவில் குடிநீர் மேல்நிலைத் தொட்டி கட்டி இப்பகுதியில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க வேண்டும்,' என்றனர்.