/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
டெண்டர் விட்டு மூனு மாசமாச்சு! ஆனாலும் ரோடு பணி துவங்கல
/
டெண்டர் விட்டு மூனு மாசமாச்சு! ஆனாலும் ரோடு பணி துவங்கல
டெண்டர் விட்டு மூனு மாசமாச்சு! ஆனாலும் ரோடு பணி துவங்கல
டெண்டர் விட்டு மூனு மாசமாச்சு! ஆனாலும் ரோடு பணி துவங்கல
ADDED : ஜன 31, 2025 11:46 PM

வால்பாறை; வெள்ளமலை எஸ்டேட் ரோடு சீரமைக்க டெண்டர் விடப்பட்டும் பணி துவங்காததால், தொழிலாளர்கள் விரக்தியில் உள்ளனர்.
வால்பாறை அடுத்துள்ளது வெள்ளமலை எஸ்டேட். இங்கிருந்து வெள்ளமலை டாப், ஊசிமலை எஸ்டேட் வரையிலான, 13 கி.மீ., துாரம் உள்ள ரோடு, பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளது.
இதனால், மக்கள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, வெள்ளமலை ரோட்டில் வாகனங்கள் செல்ல முடியாமலும், குழந்தைகள் முதல் முதியவர் வரை நடந்து செல்ல முடியாமலும் தவிக்கின்றனர்.
பல்வேறு கட்ட போராட்டத்துக்கு பின், நகராட்சி சார்பில், ஊசிமலை எஸ்டேட்டில் இருந்து வெள்ளமலை எஸ்டேட் வரையிலான ரோட்டை சீரமைக்க நகராட்சி சார்பில் டெண்டர் விடப்பட்டது.
ஆனால், இது வரை பணிகள் துவங்கப்படவில்லை. நகராட்சி அதிகாரிகளின் அலட்சியத்தால் தொழிலாளர்கள் கடும் அவதிக்குள்ளாகிவருகின்றனர்.
நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, 'ஊசிமலை எஸ்டேட்டிலிருந்து வெள்ளமலை எஸ்டேட் வரையிலான, 13 கி.மீ., துாரம் உள்ள ரோடு, 12.3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்க மூன்று மாதத்திற்கு முன் டெண்டர் விடப்பட்டது.
ஆனால், இது வரை பணி துவங்கவில்லை. சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு, ரோடு பணி உடனடியாக துவங்க நகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது,' என்றனர்.