/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பை பாஸ் சாலையில் காத்திருக்கு ஆபத்து
/
பை பாஸ் சாலையில் காத்திருக்கு ஆபத்து
ADDED : ஏப் 23, 2025 06:33 AM
போத்தனுார் : கோவை அருகே நீலாம்பூர் - மதுக்கரை பை-பாஸ் சாலையில் திருநங்கையர் போல் வேடமிட்டு, பாலியல் அழைப்பு விடுப்பவர்களை தடுக்கக, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவை வழியாக பெங்களூரு, கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இவற்றால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, 25 ஆண்டுகளுக்கு முன், நீலாம்பூர் -- மதுக்கரை பை-பாஸ் சாலை அமைக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு நேரம், எரிபொருள் செலவு மிச்சமாகிறது.
நேரத்தை மிச்சப்படுத்தவே பெரும்பாலானோர் இவ்வழியை பயன்படுத்துகின்றனர். குறிப்பாக, இரவு நேரத்தில் அதிக வாகனங்கள் செல்கின்றன.
இந்நிலையில் செட்டிபாளையம், மதுக்கரை போலீஸ் ஸ்டேஷன் எல்லைகளுக்குட்பட்ட பகுதிகளில் திருநங்கையர் போல் வேடமிட்டு சிலர் இரவு, 7:00 முதல் நள்ளிரவு, 12:00 மணி வரை, சாலையோரத்தில் காத்திருக்கின்றனர். தொலைவில் இருந்து இவர்களை பார்க்கும் வாகன ஓட்டிகள், பெண்கள் நிற்பதாக நினைத்து வாகனங்களை நிறுத்துகின்றனர்.
உல்லாசத்துக்கு அழைப்பு விடுக்கும் இவர்கள், பணம், உடமைகளை பறிப்பதாக புகார் எழுந்துள்ளது. இவர்களால் அசம்பாவித சம்பவம் நடக்கும் முன், போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

