/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'கவுன்ட் டவுன்' துவங்கியாச்சு ஐந்தே நாள்...! 'கவுன்டிங்' நடத்த சிறப்பு பயிற்சி
/
'கவுன்ட் டவுன்' துவங்கியாச்சு ஐந்தே நாள்...! 'கவுன்டிங்' நடத்த சிறப்பு பயிற்சி
'கவுன்ட் டவுன்' துவங்கியாச்சு ஐந்தே நாள்...! 'கவுன்டிங்' நடத்த சிறப்பு பயிற்சி
'கவுன்ட் டவுன்' துவங்கியாச்சு ஐந்தே நாள்...! 'கவுன்டிங்' நடத்த சிறப்பு பயிற்சி
ADDED : மே 31, 2024 01:21 AM

கோவை;கோவை லோக்சபா தொகுதியில் பதிவான ஓட்டுகள், ஜி.சி.டி., கல்லுாரியில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில், ஜூன் 4ல் எண்ணப்படுகின்றன. ஓட்டு எண்ணிக்கைக்கு இன்னும் ஐந்தே நாட்கள் தான் உள்ளதால் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.
கோவை ஜி.சி.டி., கல்லுாரி 'மெயின் பில்டிங்'கில் ஓட்டு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டுள்ளது. தரைத்தளத்தில் மூன்று சட்டசபை தொகுதிகள், முதல் தளத்தில் மூன்று சட்டசபை தொகுதிகளுக்கான ஓட்டுகள் எண்ணப்படும். முதல் தளத்தில், மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகம், தபால் ஓட்டு எண்ணும் அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஓட்டு எண்ணிக்கை மையத்தில் சட்டசபை தொகுதி வாரியாக, ஆறு அறைகள் ஒதுக்கப்பட்டு, மேஜைகள் போடப்பட்டு உள்ளன. இதேபோல், தபால் ஓட்டுகள் எண்ணுவதற்கு, மாவட்ட தேர்தல் அதிகாரி அறைக்கு அருகிலுள்ள கருத்தரங்கு ஹால் ஒதுக்கப்பட்டு, மேஜைகள் போடப்பட்டுள்ளன. சட்டசபை தொகுதி வாரியாக ஆறு மேஜை, சர்வீஸ் ஓட்டு எண்ண ஒரு மேஜை என, மொத்தம் ஏழு மேஜைகள் போடப்பட்டு உள்ளன.
பயிற்சி வகுப்பு
தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள், போலீசார், 85 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தபால் ஓட்டு செலுத்தியுள்ளனர். இவற்றை எண்ணுவதற்கு சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒரு குழுவில் தாசில்தார் அந்தஸ்தில் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி, ஓட்டு எண்ணும் கண்காணிப்பாளர் ஒருவர், ஓட்டுகள் எண்ணுவதற்கு உதவியாளர்களாக இருவர் என நான்கு பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு மைக்ரோ அப்சர்வர் நியமிக்கப்படுவர். வேட்பாளர்களின் முகவர்களும் கண்காணிப்பர்.
ராணுவ வீரர்கள் மற்றும் பாதுகாப்பு பிரிவினர் செலுத்திய 'சர்வீஸ் ஓட்டு'கள் எண்ணுவதற்கு ஒரு டேபிள் போடப்பட்டு, பிரத்யேகமாக, மூன்று அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான பயிற்சி வகுப்பு, கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
கலெக்டர் கிராந்திகுமார் தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., ஷர்மிளா முன்னிலை வகித்தார்.
தபால் ஓட்டுகளை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பாக, நோடல் ஆபீசரான, டி.ஆர்.ஓ., அபிராமி, பயிற்சி அளித்தார்.
சுற்றுக்கு 500 ஓட்டு
தேர்தல் பிரிவினர் கூறியதாவது:
தபால் ஓட்டுகள் எண்ணும் பணியை, ஜூன் 4ம் தேதி காலை, 8:00 மணிக்கு துவக்க வேண்டும். ஒவ்வொரு மேஜையிலும் ஒரு சுற்றில், 500 ஓட்டுகள் வீதம் எண்ணப்படும்.
முதலில், அனைத்து இளஞ்சிவப்பு நிற 13சி (கவர் - பி) படிவங்களை அடுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். படிவம் 13சி-ஐ பிரித்தவுடன், படிவம் 13ஏ மற்றும் படிவம் 13பி (கவர் - ஏ) இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
n 13ஏ உறுதிமொழி படிவத்தில் ஓட்டுச்சீட்டு வரிசை எண், வாக்காளரின் கையெழுத்து, சான்றொப்பம் இடுபவரின் கையெழுத்து, அலுவலக பதவி உள்ளிட்ட விபரங்கள் இருக்க வேண்டும்.
n படிவம் 13ஏ-ல் சான்றொப்பம் இடுபவரின் கையெழுத்துக்கு கீழ் அவரது பதவிக்கான முத்திரை இல்லாவிட்டாலும், பதவி மற்றும் அலுவலகம் பற்றிய தகவல் இடம் பெற்றிருந்தால் போதும்.
n படிவம் 13ஏ உறுதிமொழி இல்லை என்றாலும், சான்றொப்பம் இடும் அலுவலர் கையெழுத்து, வாக்காளர் கையெழுத்து இல்லை என்றாலும் தபால் ஓட்டு தள்ளுபடி செய்ய வேண்டும்.
ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்களுக்கு ஓட்டளித்திருந்தாலோ, போலியான ஓட்டுச்சீட்டுகள், கிழிந்த, சேதமான, முற்றிலும் கசக்கப்பட்ட ஓட்டுச்சீட்டுகளை தள்ளுபடி செய்யலாம். 'சர்வீஸ்' ஒட்டுகளை வரிசையாக 'ஸ்கேன்' செய்ய வேண்டும்.
இவ்வாறு, தேர்தல் பிரிவினர் கூறினர்.