/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையில் இன்று 'இட்ஸ் யூ' நாடகம்
/
கோவையில் இன்று 'இட்ஸ் யூ' நாடகம்
ADDED : அக் 12, 2025 12:26 AM
தொண்டாமுத்துார்:நாடகம் என்பது சினிமாவின் முன்னோடியாக மட்டுமின்றி, மொழிகள் இல்லாத காலத்திலும் மனிதர்களை ஒருங்கிணைத்தது என்ற பெருமை உண்டு.
காலப்போக்கில், தெரு நாடகங்கள் முதியவர்களுக்கானது மட்டுமே என்ற நிலை உருவாகியது.
ஆனால், தற்போதைய இளைஞர்களும், நாடகங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதோடு, நாடக கலையை கற்று, நாடகங்களை நிகழ்த்துகின்றனர்.
அவ்வகையில், கலாசேத்ரா மணிப்பூர் மற்றும் காணி நிலம் சார்பில், 'இட் ஸ் யூ' என்ற நாடகம், இன்று (அக்.12) மாலை 6.30 மணிக்கு, தீனம்பாளையத்தில் உள்ள மருதவனம் இயற்கை பண்ணையில் காணி நிலம் மண்டபத்தில் நடக்கிறது.
தற்போதைய வாழ்வில், மனிதர்கள் பல வகை உள்ளனர். சமுதாயத்தில் தங்களின் உணர்வுகளை எவ்வாறு வெளிப்படுத்துகின்றனர் என்பது தொடர்பான நாடகம் நடக்கிறது.
இசை ஒலிக்கேற்ப நாடக நடிகர்கள் விவேக் விஜயகுமாரன் மற்றும் பங்கம்பம் டைசன் மெய்டேய் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த நாடகத்துக்கு ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என, காணி நிலம் அமைப்பை சேர்ந்த மோனிகா தெரிவித்துள்ளார்.