/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பூண்டி வனப்பகுதியில் காட்டு யானை உயிரிழப்பு
/
பூண்டி வனப்பகுதியில் காட்டு யானை உயிரிழப்பு
ADDED : அக் 12, 2025 12:26 AM

தொண்டாமுத்துார்:போளுவாம்பட்டி வனச்சரகத்துக்கு உட்பட்ட வெள்ளப்பதி பிரிவு, பூண்டி தெற்கு வனச்சுற்று பகுதிக்கு உட்பட்ட வனப்பகுதியில், வனத்துறையினர் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். ஒரு ஆண் யானையின் உடல் அழுகிய நிலையில் கிடப்பதை கண்டனர்.
போளுவாம்பட்டி வனச்சரகர் ஜெயச்சந்திரன், கோவை வனக்கோட்ட உதவி வனக்கால்நடை டாக்டர் வெண்ணிலா ஆகியோர் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்துக்குச் சென்று, பிரேத பரிசோதனை செய்தனர். வனப்பகுதியிலேயே, யானையின் உடலை புதைத்தனர்.
உதவி வனக்கால்நடை டாக்டர் வெண்ணிலா கூறுகையில், ''உயிரிழந்த யானை, 25 வயது உடையது. யானையின் இரு தந்தங்களும் உடலிலேயே இருந்தது. உடலில் எவ்வித காயங்களும் இல்லை. பிரேத பரிசோதனையிலும், உடலில் விஷம், உடல் நலக்குறைவு போன்றவை எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. இயற்கையாகவே உயிரிழந்துள்ளது. யானையின் உள் உறுப்புகள் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன,'' என்றார்.