/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஜோஸ் ஆலுக்காஸ் புதிய ஷோரூம் திறப்பு
/
ஜோஸ் ஆலுக்காஸ் புதிய ஷோரூம் திறப்பு
ADDED : அக் 11, 2025 11:12 PM

கோவை: கோவையில் ஜோஸ் ஆலுக்காஸ் பிரமாண்டமான புதிய ஷோரூம், ஒப்பணக்கார வீதியில் நேற்று திறக்கப்பட்டது. திரைப்பட நடிகர் மாதவன் திறந்து வைத்தார். ஜோஸ் ஆலுக்காஸ் குழும தலைவர் ஜோஸ் ஆலுக்காஸ் எழுதிய, 'தங்கம்' என்ற சுயசரித நுாலை வெளியிட்டார்.
நடிகர் மாதவன் பேசுகையில், ''ஜோஸ் ஆலுக்காஸ் பிராண்ட் துாதராக மூன்றாண்டுகளாக பயணிப்பது சந்தோஷமாக உள்ளது. எந்த நகரத்தில் ஷோரூம் திறந்தாலும், அந்த ஊரின் மக்களின் ரசனையை பூர்த்தி செய்யும் விதமாக தங்க, வைர ஆபரணங்களை டிசைன் செய்து, வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தி வருகின்றனர். ஜூவல்லரி துறையில் பெற்ற அனுபவங்கள் அடிப்படையில் நகைகளை வடிவமைக்கின்றனர்,'' என்றார்.
ஜோஸ் ஆலுக்காஸ் குழும தலைவர் ஜோஸ் ஆலுக்காஸ் பேசுகையில், ''ஜோஸ் ஆலுக்காஸ் குழுமத்தின் வளர்ச்சி பயணத்தில் தமிழகம் எப்போதும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் ஷோரூம் திறந்திருக்கிறோம். கோவையில் இது இரண்டாவது கிளை. வாடிக்கையாளர்களின் அன்பு, நம்பிக்கையை தொடர்ந்து பெறுவோம்,'' என்றார்.
ஆலுக்காஸ் நிர்வாக இயக்குனர்கள் வர்க்கீஸ் ஆலுக்காஸ், பால் ஆலுக்காஸ் மற்றும் ஜான் ஆலுக்காஸ், கோவை எம்.பி.ராஜ்குமார். மேயர் ரங்கநாயகி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.