/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேர்தல் வரும் முன்பே ஓட்டுப்போட்ட 'வாக்காளர்கள்'
/
தேர்தல் வரும் முன்பே ஓட்டுப்போட்ட 'வாக்காளர்கள்'
ADDED : அக் 11, 2025 11:12 PM

ம சக்காளிப்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாணவர் தேர்தல் நடைபெற்றது. எல்.கே.ஜி. முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் 585 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தேர்தலில் ஓட்டளித்தனர்.
இப்பள்ளியில் எட்டு ஆண்டுகளாக மாணவர் தேர்தல் நடைபெற்று வருகிறது. இரு ஆண்டுகளாக மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் மூலம் ஓட்டளிக்கும் நடைமுறை உள்ளது. இந்தாண்டுக்கான தேர்தலில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள், வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர் பரிந்துரையின் அடிப்படையில், 9 மாணவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. 'நோட்டா' ஓட்டுப்பதிவு செய்யும் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டது.
72 மாணவர்கள் நோட்டாவுக்கு ஓட்டளித்தனர். பள்ளி மாணவர் தலைவர், துணை தலைவர், சுகாதாரத்துறை அமைச்சர் உள்ளிட்ட பதவிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு, 15ம் தேதி பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.
பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், 'ஜனநாயக முறையில் தேர்தல் எவ்வாறு நடத்தப்படுகிறது என்பதை மாணவர்கள் அறியும் வகையில் தேர்தல் நடத்த ப்பட்டது. பொதுத்தேர்தலில் கடைபிடிக்கப்படும் அ னைத்து நடைமுறை விதிமுறைகளும் பின்பற்றப்பட்டதால், மா ணவர்கள் தேர்தல் செயல் மு றை கள், பிரசாரம், நடத்தை விதிகள் ஆகியவற்றை நேரடியாக அறிந்துகொள்ள முடிந்தது' என் றனர்.