/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விதம், விதமாக 'சாஸ்' அசத்திய மாணவர்கள்
/
விதம், விதமாக 'சாஸ்' அசத்திய மாணவர்கள்
ADDED : அக் 11, 2025 11:11 PM

கோவை: ஏ.ஜே.கே. கலை அறிவியல் கல்லுாரியின் உணவளிப்பு அறிவியல் மற்றும் உணவக மேலாண்மையியல் துறை சார்பில், 'சாஸ் பவுண்டேஷன்' சாஸ் வகைகளின் அடிப்படை மற்றும் நவீன வழித்தோன்றல்கள் என்ற தலைப்பில், இரண்டு நாள் செயல்முறை பயிற்சி பட்டறை நடந்தது. ஏ.ஜே.கே. கல்வி நிறுவனங்களின் செயலர் அஜித்குமார் லால் மோகன் தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக, ஐதராபாத் கிளப் மகேந்திராவின் கார்ப்பரேட் மற்றும் சிறப்பு திட்டங்களின் தலைவராக உள்ள தலைமை சமையல் கலை நிபுணர் தேப்ராஜ் பவுமிக் கலந்து கொண்டார்.
சமையல் கலை நிபுணர்கள் மும்பை ஹில்டன் அல்தாம்ஷ் படேல், கோவை லீ மெரிடியன் டொம்னிக் சேவியர், தி ரெசிடென்சி டவர்ஸ் வினோத்குமார், மாரியட் பேர்பீல்ட் சந்தான பாரதி கலந்துகொண்டு, பயிற்சி பட்டறையை நடத்தினர்.
ஐந்து முக்கிய அடிப்படை சாஸ் வகைகளான பெச்சமெல் சாஸ், தக்காளி சாஸ், வெலுாட் சாஸ், எஸ்பானோல் சாஸ், ஹாலண்டேஸ் சாஸ் கற்றுக்கொடுக்கப்பட்டது. அடிப்படை சாஸ் வகைகளில் இருந்து, புதுவிதமான சாஸ் வகைகளை செய்து மாணவர்கள் அசத்தினர்.
ஏ.ஜே.கே. கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் ராஜூ, இயக்குனர் பிந்து அஜித் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.