/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கே.பி.ஆர். கல்லுாரியில் சொற்பொழிவு சாதனை
/
கே.பி.ஆர். கல்லுாரியில் சொற்பொழிவு சாதனை
ADDED : அக் 11, 2025 11:11 PM

கோவை: உலக மனநல தினத்தை முன்னிட்டு, கே.பி.ஆர்., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில், உலக சாதனை முயற்சியாக, 25 மணி நேரம் தொடர்ச்சியான மனநல சொற்பொழிவு நடந்தது.
கல்லுாரியின் மனநலம் மற்றும் மனமகிழ்ச்சி மன்றம், கலாமின் உலக சாதனைகள் அமைப்பு மற்றும் ரோட்டரி கிளப் ஆப் சேலம் ஜிம்கானா இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. உளவியல் நிபுணர்கள் பாபு ரங்கராஜன் மற்றும் ரோஜா ரமணி ஆகியோர் வெற்றிகரமாக நிகழ்வை நடத்தினர்.
மாணவர்களின் மன நலம் சார்ந்த மனஅழுத்த மேலாண்மை, உணர்ச்சி நுண்ணறிவு, நேர்மறை மனநிலை,தலைமைத்துவ திறன், உளவியல் நல்வாழ்வு உள்ளிட்ட 13 தலைப்புகளில் பயிற்சியும், சொற்பொழிவும் வழங்கப்பட்டது.
கல்லுாரியின் முதல்வர் தேவி பிரியா கூறுகையில், ''உலகளவில் எட்டு நபர்களில் ஒருவர் மனநல பாதிப்புடன் உள்ளார் என கூறப்படுகிறது. உடல் நலம் எவ்வளவு முக்கியமோ அதே அளவு மனநலனும் அவசியம்,” என் றார்.