ADDED : பிப் 25, 2024 10:20 PM
அன்னுார்:மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, பச்சாபாளையத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாள் விழா, அன்னூர் தெற்கு ஒன்றியத்தில் நேற்றுமுன்தினம் நடந்தது.
பச்சாபாளையத்தில், 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் சாய் செந்தில் கொடி ஏற்றினார்.
மாணவர் அணி மாவட்ட செயலாளர் கோகுல் குமார், நிர்வாகிகள் கோபால், ரங்கசாமி உள்பட பலர் பங்கேற்றனர். கணேசபுரம் உள்பட பல இடங்களில் விழா நடந்தது
வடக்கு ஒன்றியத்தில், அன்னூரில் ஒன்றிய செயலாளர் அம்பாள் பழனிசாமி கொடியேற்றினார். நகர செயலாளர் சவுக்கத் அலி உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. ஒட்டர் பாளையம், பசூர், குப்பனுார் உள்பட ஒன்றியத்தில், 25 இடங்களில் கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது.
