/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுற்றுலா பயணியரை கவர்ந்த ஜெகரெண்டா மலர்கள்
/
சுற்றுலா பயணியரை கவர்ந்த ஜெகரெண்டா மலர்கள்
ADDED : ஜன 31, 2025 11:31 PM

வால்பாறை; சாலையை அலங்கரிக்கும், ஜெகரெண்டா மலர்கள் சுற்றுலா பயணிகள் மனதை வெகுவாக கவர்ந்துள்ளன.
வால்பாறையில் பருவமழைக்கு பின், கடந்த டிசம்பர் மாதம் கார்த்திகை பூக்கள் பரவலாக பூத்துக்குலுங்குகின்றன. சீதோஷ்ண நிலை மாற்றத்தால், தற்போது, பகல் நேரத்தில் கடும் பனிமூட்டமும், இரவு நேரத்தில் கடுங்குளிரும் நிலவுகிறது.
வால்பாறையில் தற்போது நிலவும் குளுகுளு சீசனில், சுற்றுலா பயணியர் இயற்கை அழகை வெகுவாக கண்டு ரசிக்கின்றனர்.
பல்வேறு எஸ்டேட் பகுதிகளில், தற்போது ஜெகரெண்டா (ஊதாநிற மலர்கள்) பரவலாக பூத்துள்ளன. சுற்றுலா பயணியர் சாலையோரம் பூத்துக்குலுங்கும் ஜெகரெண்டா மலர்களை போட்டோ எடுத்து, ரசித்தவாறு செல்கின்றனர்.