/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - -ஜியோ ஊர்வலம்
/
கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - -ஜியோ ஊர்வலம்
ADDED : ஏப் 23, 2025 06:45 AM

கோவை; கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ- - -ஜியோ அமைப்பினர், கோவை அரசு மகளிர் பாலிடெக்னிக் அருகில் துவங்கி, வ.உ.சி., பூங்கா வரை ஊர்வலம் சென்றனர்.
ஜாக்டோ--ஜியோ உயர்மட்ட குழு உறுப்பினர் அரசு, கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ராஜசேகரன், கலைவாணன் ஆகியோர் தலைமை வகித்தனர். 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர். பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என, தமிழக அரசை வலியுறுத்தி, முழக்கங்கள் எழுப்பினர்.
காலிப்பணியிடங்களை நிரப்புதல், ஊதிய முரண்பாடுகளை நீக்குதல், காலமுறை ஊதிய உயர்வுகள் வழங்குதல், சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றும் எம்.ஆர்.பி., செவிலியர்கள், சிறப்பு ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு நிரந்தர பணி நியமனம் மற்றும் ஊதியம் வழங்கல் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
அதேபோல், 21 மாத ஊதிய நிலுவை, தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கான காலவரிசைப்படி ஊதியம் வழங்கல், சாலைப் பணியாளர்களின் பணி நீக்கம் தொடர்பான நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தல் உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

