/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு திரட்டும் ஜாக்டோ ஜியோ
/
வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு திரட்டும் ஜாக்டோ ஜியோ
ADDED : பிப் 13, 2024 10:41 PM
அன்னுார்:தமிழக அரசை கண்டித்தும், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், நாளை (15ம் தேதி) வேலை நிறுத்தத்திற்கு ஆசிரியர்கள் ஆதரவு திரட்டினர்.
பழைய பென்ஷன் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்.
இடைநிலை ஆசிரியர்களுக்கு, சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். அரசு ஆணை எண் 243 ஐ ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்தும் 120 சங்கங்கள் ஒன்றிணைந்து, 'ஜாக்டோ ஜியோ' என்னும் அமைப்பை ஏற்படுத்தி உள்ளன.
இதன் சார்பில் கடந்த 10ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் மாநாடு நடத்தினர். அடுத்த கட்டமாக நாளை (15ம் தேதி) ஒரு நாள் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதற்கு ஆதரவு திரட்டும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
ஜாக்டோ ஜியோ அமைப்பின் அன்னுார் வட்டார ஒருங்கிணைப்பாளர் வீராசாமி, துணை ஒருங்கிணைப்பாளர் ஆனந்தகுமார், ஐபெட்டா நிர்வாகி செந்தில் குமார் உள்ளிட்டோர் துவக்க, நடுநிலை பள்ளி ஆசிரியர்களிடமும், அரசு ஊழியர்களிடமும், ஆதரவு திரட்டினர்.

