/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காலியாக உள்ள 30 சதவீத பணியிடங்களை நிரப்ப வேண்டும்; ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்
/
காலியாக உள்ள 30 சதவீத பணியிடங்களை நிரப்ப வேண்டும்; ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்
காலியாக உள்ள 30 சதவீத பணியிடங்களை நிரப்ப வேண்டும்; ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்
காலியாக உள்ள 30 சதவீத பணியிடங்களை நிரப்ப வேண்டும்; ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 15, 2025 07:11 AM

அன்னுார்; பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 'ஜாக்டோ ஜியோ' அமைப்பினர் அன்னுாரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அரசின் பல்வேறு துறைகளில் 30 சதவீதத்துக்கு மேல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர், அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்களின் பணிக்காலத்தை வரன்முறைப்படுத்தி சம்பளம் வழங்க வேண்டும். பள்ளிக்கல்வித்துறை அரசாணை எண் 243 ஐ ரத்து செய்ய வேண்டும்.
பங்கேற்பு பென்ஷன் திட்டத்திற்கு பதில் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயர் கல்விக்கான சம்பள உயர்வு ஆகியவற்றை வழங்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷங்கள் எழுப்பினர்.
தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாநில துணைத்தலைவர் செந்தில்குமார் பேசுகையில், ''ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் எந்த கோரிக்கையும் அரசு நிறைவேற்ற மறுக்கிறது. இழுத்தடிக்கிறது. தேர்தல் அறிக்கையில் உறுதியளிக்கப்பட்ட பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த மறுக்கிறது,'' என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழக ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு சத்துணவு பணியாளர் சங்கம்உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த 200-க் கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் கனகராஜ் தலைமை வகித்தார். ஊரக வளர்ச்சித் துறை சங்கத்தின் தலைவர் வினோத் வரவேற்றார். மாவட்ட செயலாளர் நாகராஜன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக ஆசிரியர் கூட்டணி வட்டார செயலர் கருப்புசாமி, தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் விநாயகம் உட்பட பலர் பங்கேற்றனர். ஆசிரியர் ரெஜினா நன்றி கூறினார்.
சூலூர் மற்றும் சுல்தான்பேட்டை வட்டார அரசு ஊழியர்கள் சங்கம், ஆசிரியர்கள் கூட்டமைப்பு (ஜாக்டோ - ஜியோ) சார்பில், சூலூர் தாலுகா அலுவலகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஒருங்கிணைப்பாளர் ஜெகநாதன் தலைமையில் ஏராளமானோர் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.