/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஜலக்கண் மாரியம்மன் திருக்கல்யாண உற்சவம்
/
ஜலக்கண் மாரியம்மன் திருக்கல்யாண உற்சவம்
ADDED : அக் 12, 2024 11:26 PM
கோவில்பாளையம் : கோட்டைபாளையம் ஜலக்கண் மாரியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
கோட்டைபாளையத்தில் உள்ள பழமையான ஜலக்கண் மாரியம்மன் கோவில், கோட்டைபாளையம், தொட்டிபாளையம், அக்ரஹார சாமக்குளம் ஆகிய மூன்று ஊர்களுக்கு பொதுவானது. கடந்த, 2ம் தேதி திருக்கல்யாண உற்சவ திருவிழா துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
நேற்று முன்தினம் அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது; பொங்கல் வைக்கப்பட்டது. பக்தர்கள் மாவிளக்கு மற்றும் முளைப்பாரியோடு ஊர்வலமாக வந்தனர். சிலர் அக்னி கரகம் எடுத்து, தேர் இழுத்தனர். சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
இன்று மதியம், 3:00 மணிக்கு பொலி எருதுகளை மூன்று கிராமங்களில் இருந்து மேளதாளத்துடன், அம்மன் கோவிலுக்கு அழைத்து வருதலும், அபிஷேக ஆராதனையும் நடக்கிறது. நாளை மஞ்சள் நீராட்டும், வரும், 17ம் தேதி மறு பூஜையும் நடக்கிறது.