/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஜென்மாஷ்டமி விழா; பைரவருக்கு பன்னீர் அபிஷேகம்
/
ஜென்மாஷ்டமி விழா; பைரவருக்கு பன்னீர் அபிஷேகம்
ADDED : நவ 24, 2024 11:41 PM

அன்னுார்; திம்மநாயக்கன்புதூர், மகா பைரவர் கோவிலில் ஜென்மாஷ்டமி விழா நடந்தது.
மொண்டிபாளையம் அருகே திம்மநாயக்கன்புதூரில், மகா பைரவர் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு மாதமும், தேய்பிறை அஷ்டமியன்று வழிபாடு நடக்கிறது. இங்கு பைரவர் வடக்கு நோக்கி வீற்றிருப்பது விசேஷமானது.
கார்த்திகை மாதம் அஷ்டமி தினம் ஜென்மாஷ்டமி என்று அழைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடக்கிறது.இக்கோவிலில் ஜென்மாஷ்டமியை முன்னிட்டு, மகா பைரவருக்கு 1008 லிட்டர் பன்னீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. வேள்வி பூஜை நடந்தது. வாண வேடிக்கை நடந்தது.
அலங்கார பூஜைக்கு பிறகு, பைரவர் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னுார், சேவூர், புளியம்பட்டி பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.