மல்லிகை மொட்டு புழு மேலாண்மை வேளாண் மாணவியர் விளக்கம்
மல்லிகை மொட்டு புழு மேலாண்மை வேளாண் மாணவியர் விளக்கம்
ADDED : பிப் 26, 2026 05:55 AM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, மல்லிகை மொட்டு புழு மேலாண்மை குறித்து வேளாண் மாணவியர் செய்முறை விளக்கம் அளித்தனர்.
பொள்ளாச்சி அருகே, சூளேஸ்வரன்பட்டியில் தமிழ்நாடு வேளாண் பல்கலை இறுதியாண்டு மாணவியர், மல்லிகை மொட்டு புழு மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு செய்முறை விளக்கம் அளித்தனர். பூச்சி தாக்கத்தை கட்டுப்படுத்த, ஐந்து சதவீத வேப்பங்கொட்டை சாறு பயன்பாடு குறித்து விளக்கப்பட்டது.
மேலும், ரசாயன பூச்சிக்கொல்லிகளை தொடர்ந்து பயன்படுத்துவதால் ஏற்படும் செலவு, சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கு மாறாக, வேப்பங்கொட்டை சாறு, ஒரு பாதுகாப்பான குறைந்த செலவிலான உரிய மேலாண்மை முறையாக இருப்பது குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
இந்த செய்முறை விளக்கத்தில், வேளாண் பல்கலை பூச்சியியல் துறை முனைவர் சுமதி, மாணவியருடன் பங்கேற்று, ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை மற்றும் இயற்கை வேளாண்மை நடைமுறைகளின் முக்கியத்துவம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளித்தார்.
