/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஜே.சி.பி., வாகன உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்
/
ஜே.சி.பி., வாகன உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்
ஜே.சி.பி., வாகன உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்
ஜே.சி.பி., வாகன உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்
ADDED : ஏப் 22, 2025 11:51 PM

மேட்டுப்பாளையம், ; உதிரி பாகங்கள் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து, ஜே.சி.பி., வாகன உரிமையாளர்கள் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், மற்றும் சிறுமுகை காரமடை உள்ளிட்ட பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட ஜே.சி.பி., வாகனங்கள் இயங்கி வருகின்றன. டீசல் விலை உயர்வு மற்றும் ஜே.சி.பி. வாகனத்தின் உதிரி பாகங்கள் விலை உயர்வை கண்டித்து, வேலை நிறுத்த போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.
இதுகுறித்து, ஜே.சி.பி.,உரிமையாளர்கள் கூறுகையில், ''இந்த விலை உயர்வினால் ஜே.சி.பி.,வாடகை ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,000 இருந்து ரூ.1,300 ஆக ஏற்றப்பட்டுள்ளது.
பொதுமக்கள் இதற்கு ஆதரவு தர வேண்டும்,''என்றனர்.----