/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நகை, பணம் திருட்டு; வீட்டின் கதவை உடைத்து நகை பணம் திருட்டு
/
நகை, பணம் திருட்டு; வீட்டின் கதவை உடைத்து நகை பணம் திருட்டு
நகை, பணம் திருட்டு; வீட்டின் கதவை உடைத்து நகை பணம் திருட்டு
நகை, பணம் திருட்டு; வீட்டின் கதவை உடைத்து நகை பணம் திருட்டு
ADDED : ஜூலை 31, 2025 10:12 PM
தொண்டாமுத்தூர்; செல்லப்பகவுண்டன்புதூரில், பூட்டிய வீட்டின் கதவை உடைத்து, 2.5 பவுன் நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
செல்லப்பகவுண்டன்புதூர், விஜயநகரை சேர்ந்தவர் ஜெயக்குமார், 27, தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்றுமுன்தினம், காலை, தனது மனைவியுடன், சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள மனைவியின் அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு, இரவு உணவு முடித்துவிட்டு, இரவு, 8:30 மணிக்கு வீடு திரும்பியுள்ளார். அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது.
வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த, 2.5 பவுன் நகை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் பணம் மாயமாகியிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து, ஜெயக்குமார் அளித்த புகாரின் பேரில், பேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, நகை மற்றும் பணத்தை திருடிய மர்மநபரை தேடி வருகின்றனர்.