/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வியாபாரியின் வீட்டில் நகை, பணம் கொள்ளை
/
வியாபாரியின் வீட்டில் நகை, பணம் கொள்ளை
ADDED : ஜன 20, 2025 11:31 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; கழிவு எண்ணெய் வியாபாரி வீட்டில் தங்கம், வெள்ளியை கொள்ளையடித்த கும்பலை, போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை, துடியலூர் பன்னிமடை பாரதி நகரை சேர்ந்தவர் சரவணன், 54; கழிவு எண்ணெய் வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 15ம் தேதி வீட்டை பூட்டி விட்டு, குடும்பத்துடன் மதுரை சென்றார். நேற்று முன்தினம் கோவை திரும்பினார். வீட்டு கதவு பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த ஐந்து பவுன் தங்க நகை, ஒரு கிலோ வெள்ளிப் பொருட்கள், ரூ.60 ஆயிரம் ரொக்கம், ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை கொள்ளை போயிருந்தன.
சரவணன் புகாரின்படி, துடியலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

