ADDED : ஏப் 08, 2025 05:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனூர்; சுந்தராபுரம் எல்.ஐ.சி., காலனி அருகேயுள்ள சாய் நகர் இரண்டாவது வீதியை சேர்ந்தவர் முருகன்; மனைவி அனுசுயா, 78. நேற்று மதியம் அதே பகுதியிலுள்ள கடைக்கு சென்றுவிட்டு, வீடு திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது, பின்னால் வந்த பைக் மூதாட்டி மீது மோதியது. நிலைகுலைந்த மூதாட்டி பைக்கை பிடித்தவாறு சாலையில் உட்கார்ந்தார். அப்போது பைக்கின் பின் சீட்டில் இருந்த நபர், மூதாட்டியின் கழுத்திலிருந்த ஏழரை சவரன் தங்கத் தாலியை பறித்தார். இருவரும் பைக்கில் பொள்ளாச்சி சாலையில் இடதுபுறம் திரும்பி தப்பினர். தகவலறிந்த சுந்தராபுரம் போலீசார், அங்கு சென்று விசாரணை நடத்தி தப்பிய இருவரையும் தேடுகின்றனர்.