/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் நகை பறிப்பு
/
வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் நகை பறிப்பு
ADDED : மார் 17, 2025 12:14 AM
ஆனைமலை; ஆனைமலை அருகே சுப்பேகவுண்டன்புதுார் பகுதியைச் சேர்ந்தவர் மரியாபீவி. இவருக்கு மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ள நிலையில் தனியாக உள்ளார். அதேநேரம், அவரது மகள் மும்தாஜ், அப்பகுதியில் அவரது குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில், தினமும் மரியாபீவிக்கு உணவு அளித்தும் வருகிறார்.
இந்நிலையில் வழக்கம்போல, கடந்த, 12ம் தேதி, மதியம் உணவு தருவதற்காக மரியாபீவி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, அவரது கழுத்தில் அணிந்திருந்த மூன்று பவுன் தங்கச் செயின் காணாமல் போயிருப்பதை பார்த்து அதிர்ந்தார்.
மரியாபீவிடம் கேட்டபோது, 'ஒரு ஆணும் பெண்ணும் வீட்டுக்கு வந்ததாகவும் அந்தப் பெண் நன்றாக உள்ளீர்களா என விசாரித்து விட்டு திடீரென கழுத்தில் இருந்த நகையை கழற்றிக் கொண்டு வேகமாக சென்று விட்டனர்,' என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, ஆனைமலை போலீசில் மும்தாஜ் அளித்த புகாரின்பேரில், வழக்கு பதியப்பட்டுள்ளது. மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.