/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கொள்ளையர் பறித்துச் சென்ற நகைக்கடை உரிமையாளர் கார் மீட்பு
/
கொள்ளையர் பறித்துச் சென்ற நகைக்கடை உரிமையாளர் கார் மீட்பு
கொள்ளையர் பறித்துச் சென்ற நகைக்கடை உரிமையாளர் கார் மீட்பு
கொள்ளையர் பறித்துச் சென்ற நகைக்கடை உரிமையாளர் கார் மீட்பு
ADDED : ஜூன் 16, 2025 11:30 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனூர்; கோவையில், கொள்ளையர்களால் பறித்துச் செல்லப்பட்ட, நகைக்கடை உரிமையாளரின் காரை போலீசார் மீட்டனர்.
கேரள மாநிலம், திருச்சூர் டவுனை சேர்ந்தவர் ஜெய்ஸன் ஜேக்கப் ; நகை கடை உரிமையாளர். சென்னையிலிருந்து 1.250 கிலோ தங்க கட்டிகளுடன் ரயிலில், கோவை வந்த அவர், கடை ஊழியர் விஷ்ணுவுடன் காரில் கேரளாவுக்கு செல்லும்போது, லாரியில் வந்த ஐந்து பேர், கொடுவாளை காட்டி மிரட்டி கார், தங்கக்கட்டிகளை கொள்ளையடித்து சென்றனர்.
கொள்ளையரை தேடி வந்த தனிப்படை போலீசார், வழுக்கல் பகுதியில் தோட்ட சாலை ஒன்றில் நின்றிருந்த காரை மீட்டனர். தொடர்ந்து, கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.